போபாலில் கைவிடப்பட்ட காரிலிருந்து ரூ. 52 கோடி மதிப்பிலான தங்கம், பணம் பறிமுதல்
போபாலில் கைவிடப்பட்ட காரிலிருந்து ரூ. 52 கோடி மதிப்பிலான தங்கம், ரொக்கப் பணத்தை வருமான வரித்துறை மற்றும், காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
போலீஸ் துணை ஆணையர் பிரியங்கா சுக்லா கூறியதாவது, "குஷல்புரா சாலையில் இன்னோவா கார் நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் நின்று கொண்டிருந்ததாகவும், வாகனத்திற்குள் சுமார் 7 முதல் 8 பைகள் இருப்பதாகவும் ஒருவர் ரதிபாத் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
உடனே போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்றது. பின்னர் காரின் ஜன்னல்களை உடைத்து, அதில் இருந்து 52 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் பெரும் தொகையை கைப்பற்றினோம். கைவிடப்பட்ட கார் குவாலியரைச் சேர்ந்த சந்தன் சிங் கவுருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.85.03ஆக முடிவு!
இதுதொடர்பாக வருவான வரித்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக நகரில் சில துறைகளின் நடவடிக்கைகளுக்கு மத்தியில் யாரோ தங்கம் மற்றும் பணப் பைகளை விட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறோம். கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.52 கோடி ஆகும் என்றார்.
இந்த ரொக்கம் மற்றும் தங்கம் யாருடையது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம் என்று வருமான வரித்துறை இயக்குனர் சதீஷ் கோயல் தெரிவித்துள்ளார். கைவிடப்பட்ட காரிலிருந்து ரூ. 52 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது போபாலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.