செய்திகள் :

போராட்டங்களுக்கு அனுமதி: சட்டத் திருத்தம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

post image

தமிழகத்தில் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதிக் கோரி விண்ணப்பிக்கும் காலஅவகாசத்தை 5 நாள்களில் இருந்து 10 நாள்களாக நீட்டித்து சட்டத் திருத்தம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதுபோல, போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் காவல்துறை முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தும்படி காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில், புதிய தமிழகம் கட்சி சார்பில் பேரணி நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது.

கடைசி நேரத்தில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு புதிய தமிழகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும் புதிய தமிழகம் கட்சி மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முன்கூட்டியே அனுமதி கோரி புதிய தமிழகம் மனு கொடுத்திருந்த நிலையில், நவம்பர் 6ஆம் தேதி அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இதனால் கட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், தென்மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் சென்னை வந்திருந்ததாகவும் மனுவில் கூறியிருந்தது.

இதனை ஏற்ற நீதிமன்றம், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை 5 நாள்களிலிருந்து 10 நாள்களாக அதிகரித்து சட்டத்திருத்தம் செய்ய வேண்டும், என்றும், அனுமதி கோரும் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற காவல்துறை, விண்ணப்பங்கள் மீது ஆலோசித்து, 48 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்ததால் ரூ.1 கோடி கேட்டு கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக புதிய தமிழகம் கட்சி மீது தொடரப்பட்ட வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கைய... மேலும் பார்க்க

பிப்ரவரியில் திறப்புவிழா? ராமேஸ்வரம் வந்த ரயில்கள்! மேடை அமைத்து ஒத்திகை!

புதிய தொழில்நுட்பத்தின் கீழ் ரூ.580 கோடி பொருள்செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில் பாலம் பிப்ரவரியில் திறக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.புதிய பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவில் பிர... மேலும் பார்க்க

பெண்களை காரில் துரத்திய சம்பவம்: மாணவர்களுக்கு அரசியல் தொடர்பில்லை- காவல்துறை

சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் வந்த பெண்களை விரட்டி, மிரட்டிய சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அரசியல் தொடர்பில்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.கானத்தூா் பகுதியைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.மேலும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளராக இருந்த நிர்மல் க... மேலும் பார்க்க

பாம்பன் புதிய பாலம் வழியாக கப்பல் இயக்கி சோதனை!

பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக கடலோர காவல் படையின் கப்பலை இயக்கி ரயில்வே அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.1914 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலம் அவ்வப்போது பழுதுகள் ஏற்பட்டதால் ப... மேலும் பார்க்க

தவெகவில் இணையும் அதிமுக நிர்மல் குமார்?

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராகவுள்ள நிர்மல் குமார், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கெனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இரு... மேலும் பார்க்க