செய்திகள் :

மகா கும்பமேளா: ரூ. 7,500 கோடி மூலம் ரூ. 3 லட்சம் கோடி ஈட்டிய உ.பி. அரசு

post image

மகா கும்பமேளாவில் ரூ. 7,500 கோடி முதலீட்டில் ரூ. 3 லட்சம் கோடி பெறப்பட்டதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜன. 13 முதல் பிப். 26 ஆம் தேதி வரை 45 நாள்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவால் மாநிலத்துக்கு கிடைத்த லாபம் குறித்த தகவல்களை சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பகிர்ந்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ``கும்பமேளாவுக்கு மாநில அரசு முதலீடு செய்த ரூ. 7,500 கோடியில், கும்பமேளா ஏற்பாட்டுக்கு ரூ. 1,500 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டது. மீதத் தொகை முழுவதும் பிரக்யாக்ராஜை அழகுபடுத்துவதற்காக செலவு செய்யப்பட்டது.

வெறும் ரூ. 7,500 கோடி முதலீடு செய்தபோதிலும், ரூ. 3 லட்சம் கோடியை ஈட்டி லாபம் பெறப்பட்டுள்ளது. மகா கும்பமேளா மூலம் போக்குவரத்து துறை மூலம் ரூ. 1.5 லட்சம் கோடியும், ஹோட்டல் துறை மூலம் ரூ. 40 ஆயிரம் கோடி, உணவுத் துறை ரூ. 33 ஆயிரம் கோடி, பிரசாதம் வழங்கும் துறை ரூ. 20 ஆயிரம் கோடி, நன்கொடை ரூ. 660 கோடி, சுங்க வசூல் துறை ரூ. 300 கோடி, இதர துறைகள் மூலம் ரூ. 66 ஆயிரம் கோடி ஈட்டப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:மெக்சிகோ பயங்கரவாதம்: ஒரே வாகனத்தில் 9 சடலங்கள், உடலில்லாத 8 கைகள்

மகா கும்பத்தில் மொத்தம் 66.30 கோடி பக்தர்கள் பங்கேற்றனர், ஆனாலும் கடத்தல், கொள்ளை போன்ற குற்றங்கள் எதுவும் மகா கும்பத்தில் நடக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.

பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது கும்பமேளா. 12 முறை கழித்து நடைபெறுவது மகா கும்பமேளா. அதாவது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது. அடுத்த மகா கும்பமேளா 2169 ஆம் ஆண்டு நடைபெறும்.

கும்பமேளாவின் முக்கிய அம்சமாக கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புராண நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது வழக்கம். கும்பமேளாவுக்காக திரிவேணி சங்கமத்தில் தற்காலிக நகரமே அமைக்கப்பட்டது. சுமார் 4 ஹெக்டேர் பரப்பளவில் 25 தனித்தனி பகுதிகள், 12 படித்துறைகள், 23 சமையல் கூடங்கள், 1.5 லட்சம் கழிப்பறைகள், 11 மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன.

ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி!

இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், இந்த முடிவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். இந்திய சீனியர் ஆண்கள் தேசிய அணியின் தலைமை பயிற்சி... மேலும் பார்க்க

காங்கிரஸ் திவாலாகி விட்டது: ஜெ.பி. நட்டா

காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியாக திவாலாகி விட்டதாக பாஜக ஜெ.பி. நட்டா கூறினார்.இமாசலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா பேசியதாவது, `... மேலும் பார்க்க

குஜராத் பேரவைத் தேர்தல்: ராகுல் காந்தி அகமதாபாத் பயணம்!

குஜராத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலை மையப்படுத்தி ராகுல் காந்தி அகமதாபாத்துக்கு 2 நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.2027 ஆம் ஆண்டு குஜராத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை மையப்படுத்தி கா... மேலும் பார்க்க

ஒடிசா: பள்ளிகளைக் காவிமயமாக்கும் பாஜக அரசு!

ஒடிசாவில் அரசுப் பள்ளிகள் அனைத்திற்கும் காவிநிற வர்ணம் பூச பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் காவி நிறம் பூசுவது தொடர்பாக, அதற்கான மாதிரிப் படத்துடன் ஒடிசா மாநில மாவட்டங்களின் ஆட்சியர்களுக்... மேலும் பார்க்க

கர்நாடக பாடகியை கரம்பிடித்தார் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா!

பெங்களூரு தெற்கு எம்பியும் பாஜக தேசிய இளைஞரணி தலைவருமான தேஜஸ்வி சூர்யாவுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்துக்கும் பாரம்பரிய முறையில் வேத மந்திரங்கள் முழங்க சென்னையில் திர... மேலும் பார்க்க

ஓநாய் தாக்குதலுக்கு அடுத்ததாக நாய்களிடம் சிக்கிய உ.பி.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சிறுத்தை, யானை, ஓநாய் முதலான விலங்குகளின் தாக்குதலைத் தொடர்ந்து, தற்போது நாய்களின் தாக்குதலும் அதிகரித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம்வரையில்... மேலும் பார்க்க