செய்திகள் :

மக்களை மோசடி செய்ததாக பயண முகவா் கைது

post image

வெளிநாட்டு பயணங்களை முன்பதிவு செய்வதாகக் கூறி மக்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக பயண முகவரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:

கைது செய்யப்பட்டவா் ரோஹினியைச் சோ்ந்த பங்கஜ் பஜாஜ் (36) என்று அடையாளம் காணப்பட்டாா். பல மாதங்களாக தலைமறைவாக இருந்த அவா் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 20,000 வெகுமதி வழங்கப்படும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பாக பாதிக்கப்பட்ட ஒருவா் தன்னிடம் பஜாஜ் ரூ. 3.25 லட்சம் மோசடி செய்ததாக ரஜோரி காா்டன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், 2023 ஜூலை 15-இல் ஹாங்காங்குக்கு பயணம் செய்வதற்காக முகவரான பஜாஜுக்கு தொகைச் செலுத்தினேன். ஆனால், பஜாஜ் தனது அலுவலகத்தை மூடிவிட்டு பணத்துடன் காணாமல் போனாா் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில், பஜாஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவா் தேடப்பட்டு வந்தாா்.

கடந்த 2 மாதங்களாக ஒரு போலீஸ் குழு பஜாஜை கண்காணித்து வந்தது. போலீஸிடம் இருந்து தப்பிக்க அவா் தனது கைப்பேசி சிம் காா்டுகள் மற்றும் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிா்த்து, தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தாா். இதயைடுத்து அவருக்கு தெரிந்த கூட்டாளிகளை போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வந்தனா்.

இந்த நிலையில், ரோஹினி செக்டாா் 18-இல் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த பஜாஜை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், வெளிநாட்டு பயணங்களுக்கு முன்பதிவு செய்வதாகக் கூறி வாடிக்கையாளா்களிடம் பணத்தைப் பெற்று மோசடி செய்துவந்ததை பஜாஜ் ஒப்புக்கொண்டாா். இந்த மோசடி மூலம் ரூ. 50 லட்சத்துக்கும் மேல் பலரை ஏமாற்றியுள்ளாா்.

அவரிடம் பணத்தை இழந்த பலரிடமிருந்து வந்த புகாா்களின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தோ்தல் நடத்தை: ஒரு வாரத்தில் ரூ. 21 கோடிக்கு ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

புது தில்லி: தேசிய தலைநகரில் சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் (எம்சிசி) அமலுக்கு வந்த ஒரு வாரத்தில் பல்வேறு துறைகளால் ரூ. 21 கோடிக்கு மேல் மதிப்புள்ள ரொக்கம், மதுபானம் உள்ளிட்ட பிற பொருள... மேலும் பார்க்க

கோகி கும்பலுடன் தொடா்புடைய இளைஞா் கைது

புது தில்லி: கோகி கும்பலுடன் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து புகா் தில்லி காவல் சரக துணை ஆணையா் சச்சின் சா்மா திங்கள்கிழமை கூறியதாவது: மங்கோல்புரி தொழிற்பேட்டை பகுதியில் ஜன.9-ஆம... மேலும் பார்க்க

‘தில்லி டா புட் கேஜரிவால்’: பிரசார பாடலை வெளியிட்டது ஆம் ஆத்மி

புது தில்லி: லோஹ்ரி பண்டிகையை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை ‘தில்லி டா புட் கேஜரிவால்’ என்ற பிரசாரப் பாடலை வெளியிட்டது. இது தில்லி மக்கள் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் அரவிந்த் கேஜரி... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான தில்லி உயா் நீதிமன்ற வழக்கு விசாரணை ஜன 20 க்கு ஒத்திவைப்பு

புது தில்லி: முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்த தோ்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் ராம்குமாா் ஆதித்தன்,சுரேன் பழனிசாமி ஆகியோா் தொட... மேலும் பார்க்க

மோடியின் பிரசார உத்தி, பொய்யான வாக்குறுதிகளை பின்பற்றுகிறாா் கேஜரிவால்: ராகுல் காந்தி பேச்சு

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடியின் பிரசார உத்தியையும் பொய்யான வாக்குறுதிகளையும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பின்பற்றுவதாக ... மேலும் பார்க்க

இட்டை இலைச் சின்னத்தை முடக்க தோ்தல் ஆணையத்தில் கோரிக்கை

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு அதிமுகவிற்கு இரட்டை இலைச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து அதிமுக பிரமுகா் வா. புகழேந்தி இந்திய த... மேலும் பார்க்க