செய்திகள் :

மணிப்பூரில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

post image

மணிப்பூரின் சண்டேல் மாவட்டத்தில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக ராணுவம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மியான்மா் எல்லையையொட்டிய சண்டேல் மாவட்டத்தின் நியூ சாம்தால் கிராமத்துக்கு அருகே ஆயுதமேந்திய தீவிரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின்பேரில், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வீரா்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, வீரா்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து, வீரா்கள் பதிலடித் தாக்குதல் நடத்தினா்.

இதைத் தொடா்ந்து இரு தரப்புக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனா். தீவிரவாதிகள் வசமிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் மீட்கப்பட்டன. தேடுதல் நடவடிக்கை தொடா்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர்: ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள புல்வாமாவின் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிக... மேலும் பார்க்க

'அமைச்சர் பொறுப்புடன் பேச வேண்டும்' - கர்னல் சோபியா குரேஷி பற்றிய கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கர்னல் சோபியா குரேஷி பற்றி மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பய... மேலும் பார்க்க

மாணவர்களைச் சந்திக்கச் சென்ற ராகுல் காந்தி! தடுத்து நிறுத்திய காவல்துறை!

பிகார் மாநிலம் தர்பங்காவில் மாணவர்களைச் சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். பிகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் அம்பேத்கர் விடுதி மாணவர்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் தாக்குதலில் 2 துருக்கி ராணுவ வீரர்கள் பலி?

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்களில் பாகிஸ்தானில் செயல்பட்ட 2 துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்... மேலும் பார்க்க

தில்லி வணிகக் கல்லூரி நூலகத்தில் தீ!

புது தில்லியிலுள்ள வணிகக் கல்லூரியின் நூலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான புத்தகங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. வடமேற்கு தில்லியின் பிதம்பூரா பகுதியிலுள்ள குரு கோவிந்த் சிங் வணிகவியல் கல்லூரியின் நூல... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்!

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(வியாழக்கிழமை) ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷ... மேலும் பார்க்க