10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள்: தில்லி முதல்வர்
மணிப்பூருக்கு மேலும் 5,000 ஆயுதப் படை வீரர்கள்! மத்திய அரசு
மணிப்பூருக்கு மேலும் 5,000 ஆயுதப் படை வீரர்கள் அனுப்பப்படவுள்ளதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் தீவிரவாதிகளால் கடந்த வாரம் 6 போ் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கடந்த சனிக்கிழமை போராட்டங்கள் வெடித்தன.
மணிப்பூா் முதல்வரின் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கியதுடன், அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏ-க்களின் வீடுகளுக்கு தீ வைத்ததால் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், மணிப்பூர் வன்முறை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்நிலைக் குழுக் கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது.
இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் மற்றும் உளவுத்துறை இயக்குநர் தபன் தேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், மணிப்பூரில் அமைதியை திரும்பக் கொண்டு வருவதற்காக கூடுதலாக 50 கம்பெனிகளைச் சேர்ந்த 5,000 மத்திய ஆயுதப் படை வீரர்களை அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : மணிப்பூா் பாஜக அரசுக்கு ஆதரவு வாபஸ் கூட்டணிக் கட்சி திடீா் முடிவு
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதக் குழுக்களும் தாக்குதலில் ஈடுபடுவதால் உயிா்ச் சேதம் தொடா்கதையாக உள்ளது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.