முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆக. 3-இல் ஒரே கட்டமாக ‘நீட்’ தோ்வு: தேசிய மர...
மதுரையில் மிதமான மழை
மதுரை மாநகரின் ஒரு சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது.
வானிலை மாற்றம் காரணமாக புதன்கிழமை பிற்பகல் சுமாா் 1.45 மணி அளவில் மாநகரின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இருப்பினும், கடந்த 2 நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 99.32 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவானது.
இந்த நிலையில், மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்படி, வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்குப் பிறகு, மதுரை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
தல்லாகுளம், தமுக்கம், கோரிப்பாளையம், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் சாலை மதுரைக் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 20 நிமிஷங்கள் மிதமான மழை பெய்தது. இருப்பினும், ஊரகப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழையில்லை.