மதுரையில் மேம்பால இரும்பு சாரம் சரிந்து விபத்து: 4 பேர் காயம்
மதுரை: மதுரை கோரிபாளையத்தில் மேம்பாலம் கட்டுவதற்காக கட்டப்பட்டிருந்து சாரம் சரிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுரை கோரிபாளையத்தில் தல்லாகுளம் சந்திப்பு முதல் செல்லூர் வரை பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க |தமிழகத்தை நோக்கி நகா்கிறது புயல் சின்னம்
இந்த நிலையில், பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட இருந்த இரும்பு சாரம் பாரம் தாங்காமல் திடீரென சரிந்து விழுந்தது.
இதில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
படுகாயமடைந்த 4 பேரும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து செல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.