செய்திகள் :

புயலாக மாறுவதில் தாமதம் ஏன்?

post image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றிரவு புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்) இன்று(நவ. 28) காலை 8.30 மணி நிலவரப்படி, நாகை மாவட்டத்துக்கு தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 410 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது, வடக்கு - வடமேற்கு திசையில் இலங்கை கடற்கரையையொட்டியப்படி தமிழக கடற்கரையை நோக்கி மிக மெதுவாக நகர்ந்து வருகிறது. 

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாமல் இருப்பதற்கு அதன் நகர்வில் ஏற்பட்ட தாமதமே காரணம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மீண்டும் நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

புயல் சின்னம் உருவாகியதில் இருந்தே குறைந்த வேகத்திலும், அவ்வபோது நகராமலும் ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பது புயலாக உருவாகாமல் இருப்பதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

இலங்கை கடல் பகுதியில் இருந்து தமிழக கடல் பகுதியில் நுழைந்து புயலாக மாறி வழித்தடம் அமைத்து வர ஏதுவாக வங்கக்கடலில் 2 வெப்ப நீரோட்டம் உள்ளது. ஆனால், இந்த 2 வெப்ப நீரோட்டமும் சந்திக்கும் இடத்தில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.

இதையும் படிக்க: சென்னையில் நாளைமுதல் தீவிரமடையும் மழை!

தமிழக கரையையொட்டிய நீரோட்டத்தைப் பிடித்து புயல் சின்னம் வலுவடைந்தால் தமிழகத்தில் வியாழக்கிழமை இரவு முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கும் என்றும், எனினும் புயல் சின்னம் 2 வழித்தடத்தை எடுத்து தமிழக கரைக்கு தாமதமாக வந்தால் மழை பெய்வது தாமதமாகும் என்றும் கூறப்படுகிறது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றிரவு ஃபென்ஜால் புயலாக உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கரைகடக்கும் முன்பாக புயல் செயல் இழந்து, நவ. 30 ஆம் தேதி காரைக்கால் - மாமல்லபுரம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் கனமழை, அச்சுறுத்தும் புயல் : கோடியக்கரையில் படகுகளை பாதுகாக்கும் மீனவர்கள்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந் த கனமழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், அச்சுறுத்தும் புயலின் காரணமாக கோடியக்கரை கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்... மேலும் பார்க்க

ஆர்டிஎஸ்ஓ ஒப்புதல் இல்லாமல் பாம்பன் பாலம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன?

பாதுகாப்பு விதிகளை புறக்கணித்து பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், தர நிர்ணய அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன? என மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி... மேலும் பார்க்க

6 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்!

தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு நாளை(நவ. 29) அதி கனமழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கையை (ரெட் அலர்ட்) சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்த்த ... மேலும் பார்க்க

காதலியை கரம் பிடித்தார் சிறகடிக்க ஆசை நடிகர்!

சிறகடிக்க ஆசை தொடர் நாயகன் வெற்றி வசந்த்க்கும், பொன்னி சீரியல் நாயகி வைஷ்ணவிக்கும் இன்று(நவ. 28) திருமணம் நடைபெற்றது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரில் முத்து பாத்திரத்தில் ... மேலும் பார்க்க

திருச்சி வந்த விமானத்தின் தண்ணீர் குழாய்களில் மறைத்து கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விமானத்தின் தண்ணீர் குழாய்களில் மறைத்து கடத்திவரப்பட்ட ரூ. 13.69 லட்சம் மதிப்பிலான தங்கம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.திருச்சி பன்னாட்டு விமான நிலையத்த... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைனில் அடையாள அட்டை: தெற்கு ரயில்வே தகவல்

மாற்றுத்திறனாளி பயணாளிகள், ரயில்வே சலுகை பயணச்சீட்டு அடையாள அட்டை பெறுவதற்கு புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள திவ்யங்ஜன் இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.நாடு மு... மேலும் பார்க்க