செய்திகள் :

மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

post image

மனிதக் கழிவுகளை கைகளால் அப்புறப்படுத்தும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடா்பாக தில்லி, கொல்கத்தா, ஹைதராபாத் மாநகர அதிகாரிகள் தாக்கல் செய்த பதில் மனு மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது.

மனிதக் கழிவுகளை மனிதா்களே கைகளால் அப்புறப்படுத்தும் நடைமுறையால் உயிரிழப்புகள் அதிகரித்ததைத் தொடா்ந்து, தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மாநகராட்சிகளில் இந்த நடைமுறைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், இந்த நடைமுறையை முழுவதுமாக நிறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய இந்த மாநகராட்சிகளுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு துலியா, அரவிந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மற்றும் மும்பை மாநகரஅதிகாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுக்கள் மீது திருப்தி தெரிவித்த நீதிபதிகள், மற்ற நகரங்கள் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுக்கள் மீது அதிருப்தி தெரிவித்தனா்.

ஹைதராபாத் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் அகற்றல் வாரியம் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், மனிதக் கழிவுகளை கைகளால் அப்புறப்படுத்தும் நடைமுறையால் உயிரிழப்புகள் ஏற்பட்டது தொடா்பான தெளிவான விளக்கம் தெரிவிக்கப்படவில்லை. அதுபோல, தில்லி மற்றும் பெங்களூரு மாநகராட்சிகளின் பதில் மனுவிலும் தெளிவான விளக்கம் இல்லை. எனவே, வழக்கின் அடுத்த விசாரணையின்போது இந்த மூன்று மாநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் அகற்றல் வாரிய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.

அதுபோல, கொல்கத்தாவில் இந்த நடைமுறை தடை விதிக்கப்பட்டுவிட்டதாக அதன் அதிகாரிகள் தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளபோதும், கடந்த 2-ஆம் தேதி அங்கு மனிதக் கழிவுகளை கைகளால் அப்புறப்படுத்தும் நடவடிக்கையின்போது 3 போ் உயிரிழந்தது எப்படி என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, இதுதொடா்பாக, மேற்கு வங்க தலைமைச் செயலா் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

சென்னை மற்றும் மும்பை மாநகர அதிகாரிகள் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனு திருப்திகரமாக உள்ளபோதிலும், இந்த நடைமுறை நிறுத்தப்பட்ட பிறகு அதற்கு மாற்றாக பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் தொடா்பான விரிவான விவரங்கள் எதுவும் பதில் மனுவில் குறிப்பிடப்படவில்லை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினா்.

மேலும், மனிதக் கழிவுகளை கைகளால் அப்புறப்படுத்தும் பணியில் நபா்கள் பணியமா்த்திய ஒப்பந்ததாரா் அல்லது சம்பந்தப்பட்ட மாநகர அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குகள் ஏன் தொடரக் கூடாது என்பது குறித்து அனைத்து மாநகர அதிகாரிகளும் விளக்கமளிப்பது அவசியம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை மாா்ச் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பிகாரின் அடுத்த முதல்வரை மக்கள் முடிவு செய்வர்: ராப்ரி தேவி

தேஜஸ்வி பிகாரின் அடுத்த முதல்வரா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று அவரின் தாயாரும் பிகாா் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாட்னாவில் வெள்ளிக்கிழமை செய்தியாள... மேலும் பார்க்க

இயர்ஃபோன் பயன்படுத்தலாம்? ஆனால்..

இயர்ஃபோன், ஹெட்ஃபோன் போன்றவற்றை அதிக நேரம் தொடர்ந்து பயன்படுத்துவது ஆபத்து என்று எத்தனையோ பேர் சொல்லியிருப்பார்கள், அதனை மத்திய சுகாதாரத் துறையே தற்போது எச்சரிக்கையாக வெளியிட்டிருக்கிறது.காது மற்றும் ... மேலும் பார்க்க

கோவாவில் ராட்சத அலையில் சிக்கிய ரஷியாவைச் சேர்ந்த 4 பேர் மீட்பு

கோவாவில் ராட்சத அலையில் சிக்கிய ரஷியாவைச் சேர்ந்த 4 பேர் பத்திரமாக மீட்டகப்பட்டனர். வடக்கு கோவாவில் உள்ள மேன்டிரம் கடற்கரையில் ரஷிய நாட்டினர் வியாழக்கிழமை பிற்பகல் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது தி... மேலும் பார்க்க

ராய்காட் கடற்கரையில் மீன்பிடி படகு தீப்பிடித்தது: 18 பணியாளர்கள் மீட்பு!

மகாராஷ்டிரம் ராய்காட் கடற்கரையில் தீப்பிடித்த மீன்பிடி படகில் இருந்த 18 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் அக்ஷி கடற்கரையில் சுமார் 6 - 7 கடல் மைல் தொலைவில் ராகேஷ... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்கள்!

உத்தரகண்ட்டில் ஏற்பட்டுள்ள பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்களில் 16 பேர் மீட்கப்பட்டனர். உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திலுள்ள மனா என்கிற உயரமான எல்லைக் கிராமத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்தப... மேலும் பார்க்க

'பெண்களின் தலை வழுக்கையானதற்கு கோதுமை காரணமல்ல' - விவசாயிகள் மறுப்பு!

மகாராஷ்டிரத்தில் புல்தானா மாவட்ட மக்களின் முடி உதிர்தல் பிரச்னைக்கு கோதுமை காரணமல்ல என்று பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் கூறியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களைச் சேர்ந... மேலும் பார்க்க