ஆண்மைக்கான மாத்திரைகளை டாக்டர் பரிந்துரைக்காமல் வாங்கிச் சாப்பிடலாமா? - காமத்துக...
மருத்துவர், ஐஏஎஸ், பேரிடர் கால நிர்வாகி பீலா வெங்கடேசன்!
எம்பிபிஎஸ் படித்த மருத்துவர், அரசின் பல பொறுப்புகளை வகித்த ஐஏஎஸ் அதிகாரி, பேரிடர் கால நிர்வாகி என பன்முகங்களைக் கொண்ட பீலா வெங்கடேசன், தன்னுடைய 56வது வயதில் காலமானார்.
தமிழக அரசின் முதன்மைச் செயலராக இருந்த பீலா வெங்சடேசன், கடந்த சில மாதங்களாக மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் எரிசக்தித் துறை செயலராக பணியாற்றி வந்தார்.
1997-ஆம் ஆண்டு பிகார் மாநிலப் பிரிவில் இருந்து குடிமைப் பணிக்கு பீலா தேர்ச்சி பெற்றார். போஜ்பூர் மாவட்ட உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கிய அவர், பிறகு மண வாழ்க்கை காரணமாக தமிழ்நாடு மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக மாறி தனது பணியைத் தொடர்ந்தார்.