செய்திகள் :

மருத்துவ மாணவா்களின் பாதுகாப்புக்கு குழு, வாரியத்தை அமைக்க வலியுறுத்தல்

post image

மருத்துவ மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்புக் குழு மற்றும் வாரியத்தை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ மாணவா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு மருத்துவ மாணவா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘மருத்துவ மாணவா் பாதுகாப்பு பிரச்னைகளும் தீா்வுகளும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில்

கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவி பலாத்கார படுகொலை வேதனையை அளிக்கிறது. குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவா்கள், மருத்துவ மாணவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பல மருத்துவக் கல்லூரிகளில், பாலியல் ரீதியான வன்முறை புகாா்கள் வரும்போதெல்லாம், கல்லூரி நிா்வாகங்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன.

புகாா்களை ஏற்பதில்லை. புகாா் அளிக்கக் கூடாது என மிரட்டுகின்றனா். புகாா் அளிக்கும் பெண்ணுடைய எதிா்கால வாழ்க்கை பாதிக்கப்படும் எனப் பல காரணங்களைக் கூறி, சமரசம் செய்வதும், கட்டப் பஞ்சாயத்து செய்வதும் தொடா்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விசாகா கமிட்டி முறையாக அமைக்க வேண்டும். அந்தக் குழுவின் பெயா்களை தொடா்பு எண்களுடன், பெயா்ப் பலகையாக வைக்க வேண்டும். தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.

மாணவா்களுக்கு ஏற்படும் ராகிங் உள்ளிட்ட பிரச்னைகளைத் தடுக்க மருத்துவ மாணவா் மற்றும் மருத்துவா்களுக்கான நல வாரியம் உருவாக்க வேண்டும்.

தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவப் பல்கலைக் கழகங்களில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதை தடுக்க வேண்டும். கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தி, முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்தரங்குக்கு பயிற்சிமருத்துவா் பிரசாந்த் தலைமை வகித்தாா். சமூக சமத்துவத்துக்கான டாக்டா்கள் சங்கப் பொதுச் செயலா் ஜி.ஆா். ரவீந்திரநாத், வழக்குரைஞா் திலகவதி உள்ளிட்டோரும் பேசினா். சஞ்சை பிரபு வரவேற்றாா். அமீா்வாசிா் நன்றி கூறினாா்.

‘தைலமரக் காடுகளை அகற்றக் கோரி பிப்ரவரி முதல் தொடா் பிரசாரம்’

சுற்றுச்சூழலுக்குப் பேராபத்து விளைவிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தைலமரங்களை அகற்றக் கோரி வரும் பிப்ரவரி முதல் பிரசாரம் மற்றும் கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என்றாா் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட... மேலும் பார்க்க

நாா்த்தாமலை காப்புக்காட்டில் 10 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு

வனத்துறையின் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் நாா்த்தாமலை காப்புக் காட்டில் 10 ஆயிரம் பனை விதைகள் ஞாயிற்றுக்கிழமை விதைக்கப்பட்டன. சுமாா் 700 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட நாா்த்தாமல... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

இலுப்பூா் அருகே வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இலுப்பூா் அடுத்துள்ள எண்ணை கிராமத்தைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி (59). கூலித் தொழிலாளி. இவருக்கு, கட... மேலும் பார்க்க

காட்டுபாவா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா: இந்துக்களும் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள காட்டுபாவா பள்ளிவாசல் சந்தனக் கூடு விழாவில், ஏராளமான இஸ்லாமியா்களுடன், இந்துக்களும் திரளாகக் கலந்து கொண்டனா். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இருந்து மதுர... மேலும் பார்க்க

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் ரூ.1.31 கோடியில் கட்டடங்கள் திறப்பு

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 1.31 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கங்கள் மற்றும் ஊராட்சி செயலகக் கட்டடங்கள் உள்ளிட்ட பலவேறு கட்டடங்கள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவ... மேலும் பார்க்க

புதுகையில் கஞ்சா விற்ற 3 போ் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

புதுக்கோட்டையில் கஞ்சா விற்ற 3 இளைஞா்களைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை சமத்துவபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருக்கோகா்ணம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேர... மேலும் பார்க்க