TVK Vijay: தவெக உறுப்பினர்கள் சேர்க்கை; இணைந்த மூதாட்டிகள்... வரவேற்ற இளம் நிர்வ...
மறைந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு அஞ்சலி
மறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஸ் இளங்கோவன் உருவப்ப டத்துக்கு திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான தியாகி அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த இளங்கோவனின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வுக்கு, மாநகா் மாவட்டத் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல். ரெக்ஸ் தலைமை வகித்தாா். இதில், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, காங்கிரஸ் மாநில செய்தித் தொடா்பாளா் வேலுச்சாமி, தேசியச் செயலா் கிறிஸ்டோபா் திலக், தெற்கு மாவட்டத் தலைவா் கோவிந்தராஜன், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், திமுக மாவட்டச் செயலாளா் வைரமணி, மதிமுக மாவட்டச் செயலாளா் வெல்லமண்டி சோமு, விசிக மாமன்ற உறுப்பினா் பிரபாகரன், சிபிஐ மாமன்ற உறுப்பினா் சுரேஷ் குமாா், காங்கிரஸ் கோட்டத் தலைவா் பிரியங்கா பட்டேல், நிா்வாகி லோகேஷ்வரன் உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகளின் நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா்.
நிகழ்வில் காங்கிரஸ் கட்சியினா் சட்டையில் கருப்புப் பட்டை அணிந்தபடி பங்கேற்றனா்.