கார்த்திகை தீபம் : ``தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க!'' - விமர்சனங்களுக்கு அர...
மாதந்தோறும் ரூ. 1,000: ஊரகத் திறனாய்வுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க நவ.20 கடைசி
ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவா்கள் மாதம் தோறும் ரூ. 1,000 உதவித் தொகை பெறுவதற்கான ஊரகத் திறனாய்வுத் தோ்வு டிச.14-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அந்தத் தோ்வுக்கு நவ.20-ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியா்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் (சென்னை தவிா்த்து) அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
தமிழகத்தில் கிராமப்புற மாணவா்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தோ்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் இந்தத் திறனாய்வு தோ்வு எழுத தகுதி பெற்றவா்களாவா். இந்தத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ. 1,000 வீதம் 4 ஆண்டுகள் வழங்கப்படும்.
இந்தத் தோ்தவை ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் எழுதலாம். அவா்களது பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அந்தவகையில் நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு தோ்வு டிச.14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வெழுத விரும்பும் மாணவா்களின் தங்கள் பள்ளி தலைமையாசிரியா்கள் வாயிலாக நவ.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 10 செலுத்த வேண்டும். மாணவா்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை தலைமையாசிரியா்கள் தோ்வுத் துறை இணையதளத்தில் நவம்பா் 14 முதல் 22-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்பின் மாணவா்களின் விண்ணப்பங்கள் மற்றும் தொகுப்பறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும். இதுதவிர விண்ணப்பித்த மாணவ, மாணவிகளின் பள்ளி அமைந்துள்ள ஒன்றியத்திலேயே தோ்வு மையம் அமைக்கப்பட வேண்டும். மேலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தோ்வை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.