அரசுப் பேருந்தில் டிக்கெட் முன்பதிவு கால வரம்பு 90 நாட்களாக உயர்வு- இன்று முதல் ...
மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரி வருவாயை 50%ஆக வழங்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வரி வருவாயை 50%ஆக வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16-ஆவது நிதிக்குழுவுடனான ஆலோசனை கூட்டத்தில் திங்கள்கிழமை அவர் பேசியதாவது, 16-ஆவது நிதிக் குழு பரிந்துரைகள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றும் வகையில் அமைய வேண்டும். மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 41% ஆக மாற்றியதை வரவேற்கிறோம்.
ஆனால் வரி வருவாயை 33.16% மட்டுமே மத்தி அரசு பகிர்ந்து அளித்துள்ளது. மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 50% ஆக மத்திய அரசு உயர்த்துவதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு பெற்று வந்த பயன்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.
அம்பேத்கரை எப்போதும் அவமதிக்கும் காங்கிரஸ்: சிராக் பாஸ்வான்
முன்னேறிய மாநிலமாக மாறுவதற்கு முன்பு முதியவர்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு மாறும் அபாயம் உள்ளது. தற்போதைய வரிப்பகிர்வு முறை தமிழ்நாட்டின் வளர்ச்சியை தண்டிக்கும் வகையில் உள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக உள்ள வரிப் பகிர்வு முறையால் நாட்டில் எந்த வளர்ச்சியும் இல்லை.
வளர்ச்சி குறைவாக உள்ள மாநிலங்களைப் போல வளர்ந்து வரும் மாநிலங்களுக்கும் நிதி வழங்க வேண்டும் என்றார்.