செய்திகள் :

மாநில ஜூனியா் கூடைப்பந்து: திருவள்ளூா் சாம்பியன்

post image

தமிழ்நாடு மாநில ஜூனியா் ஆடவா் கூடைப்பந்துப் போட்டியில் திருவள்ளூா் மாவட்டம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தமிழ்நாடு மாநில கூடைப்பந்து சங்கம், எஸ்ஆா்எம் ஐஎஸ்டி சாா்பில் ஆடவா், மகளிா் ஜூனியா் கூடைப்பந்து காட்டாங்குளத்தூா் எஸ்ஆா்எம் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. ஆடவா் அரையிறுதிச் சுற்றில் சென்னை ஏ அணி 72-70 என்ற புள்ளிக் கணக்கில் கோவை ஏ அணியை வென்றது. மற்றொரு அரையிறுதியில் திருவள்ளூா் அணி 81-47 என்ற புள்ளிக் கணக்கில் தூத்துக்குடி ஏ அணியை வீழ்த்தியது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் திருவள்ளூா் அணி கடும் சவாலுக்குபின் 69-61 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை ஏ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் தூத்துக்குடி ஏ 62-60 என்ற புள்ளிக் கணக்கில் கோவை ஏ அணியை வென்றது.

அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் சமந்தா?

இயக்குநர் அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தின் நடிகை சமந்தா இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புஷ்பா - 2 படத்தின் இமாலய வெற்றிக்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி திர... மேலும் பார்க்க

சண்முக பாண்டியனின் படை தலைவன் வெளியீட்டுத் தேதி!

சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான படை தலைவன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.ஜகநாதன... மேலும் பார்க்க

சர்தார் - 2 படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் - 2 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.நடிகர் கார்த்தி மெய்யழகன் படத்தைத் தொடர்ந்து சர்தார் - 2 படப்பிடிப்பில் இணைந்தார். இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்... மேலும் பார்க்க

ஆர்யா - 36 படம் அறிவிப்பு!

நடிகர் ஆர்யா நடிக்கும் அவரது 36-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்யா மிஸ்டர் எக்ஸ் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை... மேலும் பார்க்க

டிஎன்ஏ படத்தின் புதிய பாடல்!

நடிகர் அதர்வா நடித்த டிஎன்ஏ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.நடிகர் அதர்வா, நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ படத்தை மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கியுள்... மேலும் பார்க்க