செய்திகள் :

மார்ச் 4 முதல் புதிய வரி விதிப்பு அமல்: டிரம்ப்பால் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு?

post image

சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு மார்ச் 4 முதல் அமல்படுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்க பொருளாதாரத்தை பாதுகாக்கவும், சீனாவின் வர்த்தக முறைகேடுகளை தடுக்கவும் சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளுக்கும் புதிய வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்த வரி விதிப்பு பிப்ரவரியில் அமலுக்கு வருவதாக அறிவித்த நிலையில், மேலும் ஒருமாத கால அவகாசமும் வழங்கினார்.

இந்த நிலையில், மார்ச் 4 ஆம் தேதி முதல் இந்த புதிய வரி விதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து, அவர் கூறியதாவது ``சீனாவில் தயாரிக்கப்படும் போதைப் பொருள்கள், வலி நிவாரணிகள் வடிவில் மெக்சிகோ, கனடா நாடுகள் மூலம் அமெரிக்காவுக்குள் வருகின்றன. இவ்வாறான போதைப் பொருள்களால் மட்டும் அமெரிக்காவில் கடந்தாண்டு 1 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

போதைப் பொருள்களால் அமெரிக்கா தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. ஆகையால், இந்த போதைப் பொருள் விநியோகம் நிறுத்தப்படும்வரையில், 3 நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு தொடரும்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:டிரம்ப் முகத்தைப் பார்க்க முடியவில்லை.. டைட்டானிக் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அதிரடி முடிவு

டிரம்ப் விதித்துள்ள புதிய வரியின்படி, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவிகித வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவிகித வரியும் விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஆற்றல் துறை சார்ந்த இறக்குமதிகளுக்கு 10 சதவிகித வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் புதிய வரியை விதிப்பதற்கு வேறு சில காரணங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. சீனாவிலிருந்து அதிகளவில் பொருள்கள் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படுவதால், அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி குறைந்து, அமெரிக்காவின் பணப்புழக்கம் சீனாவுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.

இதனால், அமெரிக்காவின் உள்ளூர் தொழில்துறையை மீட்கும்வகையில், சீன பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்க டிரம்ப் முடிவு செய்ததாகவும் கூறுகின்றனர். புதிய வரி விதிப்பால் சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தக உறவு கடுமையாக பாதிப்படையலாம்.

மேலும் இந்த புதிய வரி விதிப்பால், உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதுமட்டுமின்றி, டிரம்ப்பின் புதிய வரிகளை எதிர்த்து, அதிகாரிகளுடன் அமெரிக்க வணிக சங்கம் ஆலோசனை நடத்தி வருகிறது.

ஸெலென்ஸ்கியின் தோல்வி: டிரம்ப் சந்திப்பை விமர்சித்த ரஷியா!

ஸெலென்ஸ்கியின் அமெரிக்க பயணம் முழுமையான அரசியல் தோல்வி என ரஷியா விமர்சித்துள்ளது. ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைமாறாக, அந்த நாட்டின் அரிய வகைக் க... மேலும் பார்க்க

போப் உடல்நிலையில் முன்னேற்றம்.. இன்று காலை காபி குடித்தார்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அவர் காபி குடித்து, ஓய்வெடுத்துள்ளார்.உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்... மேலும் பார்க்க

டிரம்ப் - ஸெலென்ஸ்கி இடையே காரசார வாக்குவாதம்! நடந்தது என்ன?

ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு காரசார வாக்குவாதத்தில் முடிந்தது.உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவர... மேலும் பார்க்க

டிரம்ப் முகத்தைப் பார்க்க முடியவில்லை.. டைட்டானிக் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அதிரடி முடிவு

அமெரிக்காவிலிருந்து நியூ ஸிலாந்துக்கு குடிபெயரப்போவதாகவும், நிரந்தரமாக அங்கேயே தங்கிவிட முடிவு செய்திருப்பதாகவும், டைட்டானிக், அவதார் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்து... மேலும் பார்க்க

'டிரம்பிடம் மன்னிப்பு கேட்க முடியாது'- ஸெலென்ஸ்கி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் மன்னிப்பு கேட்க உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி மறுத்துள்ளார். ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் வெள்... மேலும் பார்க்க

சா்வதேச உதவிக்கு நிதிக் குறைப்பு: பிரிட்டன் அமைச்சா் ராஜிநாமா

வெளிநாடுகளுக்கு உதவியளிப்பதற்கான நிதி ஒதுக்கீட்டை பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் வெகுவாகக் குறைத்துள்ளதைத் தொடா்ந்து, சா்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னிலீஸ் டாட்ஸ் (படம்) தனது பதவியை ராஜிநாம... மேலும் பார்க்க