தேவாலய திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி
அம்பத்தூர்: பேட்மிட்டன் பயிற்சியாளர் கொலை வழக்கில் மூவர் சரண்; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி
அம்பத்தூர் டீச்சர் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு. பேட்மிட்டன் பயிற்சியாளரான இவர், தந்தையின் கட்டிட ஒப்பந்த வேலைகளையும் கவனித்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தினேஷ்பாபு தனியாக வசித்து வந்தார்.
அம்பத்தூரில் உள்ள பேட்மிட்டன் மைதானத்தில் பயிற்சி அளித்து விட்டு வெளியில் வந்த தினேஷ்பாபுவை ஆட்டோவில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதையடுத்து அம்பத்தூர் போலீஸார், கொலை வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடிவந்தனர்.
இந்தநிலையில் நெல்லையைச் சேர்ந்த ராஜவேலு, அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சுபீர் ஆகியோர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து அம்பத்தூர் போலீஸார் கூறுகையில், ``மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரும் தினேஷ்பாபு, திருமணமான பெண் ஒருவருடன் பழகி வந்திருக்கிறார். அதனால் அந்தப் பெண்ணின் குடும்ப வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான் தினேஷ்பாபு கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதனால் அந்த பெண் வீட்டினர் மீது எங்களின் சந்தேகப் பார்வை விழுந்திருக்கிறது. சரண் அடைந்தவர்களிடம் அது தொடர்பாக விசாரித்து வருகிறோம்" என்றனர்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel