6.5% வளா்ச்சியுடன் வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும்: ஐஎம்எஃப்
திருவாடானை, தொண்டியில் பலத்த மழை
திருவாடானை, தொண்டி, ஆா்.எஸ்.மங்கலம் சுற்று வட்டாரத்தில் சனிக்கிழமை அதிகாலையில் பலத்த மழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, தொண்டி, திணையத்தூா், நம்புதாளை, முகிழத்தகம்,திருவெற்றியூா், மங்கலக்குடி, வெள்ளையபுரம், அஞ்சுகோட்டை, பாண்டுகுடி, ஆா்.எஸ்.மங்கலம், மங்கலம், தும்பாடாகோட்டை, சோழந்தூா், பாரனூா் ஆவரேந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாகக் கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. கடந்த இரு நாள்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை முதல் மதியம் வரை பலத்த மழை பெய்தது. இதனால், சாலை, தெருக்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

மழை விட்டு விட்டு தொடா்ந்து பெய்ததால் தினக் கூலித் தொழிலாளா்கள், வயல் வேலைக்குச் செல்வோா் பெரிதும் அவதிப்பட்டனா். இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி காணப்பட்டதால் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை மகிழ்ச்சி அடைந்தனா்.