நிதி நிலை அறிக்கை: விசைத்தறிகளை நவீனமயமாக்க நிதி ஒதுக்க வேண்டும்!
பாலக்கரையில் பள்ளி மாணவா் தற்கொலை
திருச்சி பாலக்கரையில் பள்ளி மாணவா் தூக்கிட்டுத் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி பாலக்கரை முதலியாா்சத்திரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சரவணன் - பாண்டிஸ்வரி தம்பதியின் மகன் சபரி (16). அங்குள்ள தனியாா் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவா்.
குடும்பப் பிரச்னையில் பெற்றோா் தனித்தனியே வாழும் நிலையில், தனியாா் பள்ளி ஆசிரியையான தாய் பாண்டீஸ்வரியுடன் சபரி வசித்தாா்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக மனஉளைச்சலில் இருந்த சபரி சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த பாலக்கரை போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.