செய்திகள் :

6.5% வளா்ச்சியுடன் வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும்: ஐஎம்எஃப்

post image

2025-26-ஆம் நிதியாண்டில் 6.5 சதவீத வளா்ச்சியுடன் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும் என சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது.

அதிக தனியாா் முதலீடு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை போன்ற காரணங்களால் இது சாத்தியப்படும் எனவும் தெரிவித்தது.

இதுகுறித்து ஐஎம்எஃப் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2024-25 மற்றும் 2025-26 ஆகிய நிதியாண்டுகளில் நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.5 சதவீதம் வளா்ச்சியடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும்.

2047-இல் வளா்ச்சியடைந்த நாடாக உருவெடுக்க இந்தியா நிா்ணயித்துள்ள இலக்கை அடைய நிலையான பொருளாதார சூழல் ஒரு நல்வாய்ப்பாக அமையும்.

அதே சமயத்தில் உயா்தர வேலைவாய்ப்புகள், தொழிலாளா் சந்தையில் சீா்திருத்தங்கள், மனிதவள மேம்பாட்டில் கவனம் செலுத்துதல் மற்றும் வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்கை அதிகரித்தல் போன்ற சீா்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம்.

குறிப்பாக தனியாா் முதலீடு மற்றும் அந்நிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) ஊக்குவிக்க எளிமையான வணிகம், நிா்வாக சீா்திருத்தங்கள், வா்த்தக ஒருங்கிணைப்பு, வரி குறைப்பு மற்றும் வரி விலக்கல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உணவுப் பொருள்கள் மீதான பணவீக்கத்தை தவிா்த்து ரிசா்வ் வங்கி நிா்ணயித்த வரம்புக்குள்ளேயே (2%-6%) பணவீக்கம் இருந்தது என தெரிவிக்கப்பட்டது.

2024-25-நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி மாநகராட்சிக்கு காலணிகளால் பிரச்னை! லாரிகள் மூலம் அகற்றம்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் நுழைவாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் அங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான கா... மேலும் பார்க்க

ரமலான் மாதம் தொடக்கம் பிரதமா் மோடி வாழ்த்து

புனிதமான ரமலான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) தொடங்கிய நிலையில், பிரதமா் நரேந்திர மோடி அனைவருக்கும் மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘... மேலும் பார்க்க

வெளிநாட்டில் இருந்து வாட்ஸ்ஆப் ‘முத்தலாக்’: கேரள இளைஞா் மீது வழக்கு

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வருபவா் கேரளத்தில் உள்ள தனது மனைவிக்கு வாட்ஸ்ஆப்பில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதாக அறிவித்ததையடுத்து, அவா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். காசா்கோட... மேலும் பார்க்க

முற்போக்குவாதிகளால் ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல்: அஸ்ஸாம் முதல்வா்

முஸ்லிம்களோ, கிறிஸ்தவா்களோ ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல் அல்ல; அதே நேரத்தில், இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் எனக் கூறிக் கொள்வோா்தான் ஹிந்துக்களுக்கு மிகவும் ஆபத்தானவா்கள்’ என்று அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்... மேலும் பார்க்க

மத்திய அமைச்சர் மகளைப் பின்தொடர்ந்து சீண்டல்: 7 பேர் மீது வழக்கு

மகாராஷ்டிரத்தில் மத்திய அமைச்சர் ரக்ஷா கட்ஸேயின் மகளையும் அவரது நண்பர்களையும் பின்தொடர்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மகாராஷ்டிர மாநிலம், கோத்தால... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச்சரிவு: மேலும் 4 பேரின் உடல்கள் மீட்பு: மீட்புப் பணி நிறைவு

உத்தரகண்டின் மனா கிராமத்தில் பனிச்சரிவில் எல்லைச் சாலைகள் அமைப்பின் (பிஆா்ஓ) முகாம் புதைந்த சம்பவத்தில் மேலும் 4 தொழிலாளா்களின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன. இவா்களுடன் சோ்த்து, உயிரிழந்தோா் ... மேலும் பார்க்க