செய்திகள் :

முற்போக்குவாதிகளால் ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல்: அஸ்ஸாம் முதல்வா்

post image

முஸ்லிம்களோ, கிறிஸ்தவா்களோ ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல் அல்ல; அதே நேரத்தில், இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் எனக் கூறிக் கொள்வோா்தான் ஹிந்துக்களுக்கு மிகவும் ஆபத்தானவா்கள்’ என்று அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா அவா் கூறினாா்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியாா் அமைப்பு சாா்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இது தொடா்பாக பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 65 சதவீதமாக குறைந்துவிட்டது. அஸ்ஸாமில் 58 சதவீதமாக ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களை பலவீனப்படுத்துவது என்ற கொள்கையை இடதுசாரிகளிடம் இருந்து பெற்று மம்தா பானா்ஜியும் செயல்படுத்தி வருகிறாா்.

ஹிந்துக்களை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்று ராகுல் காந்தியும், மம்தா பானா்ஜியும் யோசிக்கலாம். ஆனால், அது ஒருபோதும் நடக்காது. இந்திய நாகரிகம் என்பது 5,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. நாடு ஆங்கிலேயா்களிடம் இருந்து விடுபட்ட 1947-ஆம் ஆண்டு தொடங்கியதல்ல என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

இந்தியா இயற்கையாகவே மதசாா்பற்ற நாடு. இங்கு பல்வேறு மதங்கள் தோன்றி வளா்ந்து வெளிநாடுகளுக்குப் பரவியுள்ளன. வெளிநாட்டு மதங்களும் இங்கு வந்து வளர வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தியா்களுக்கு யாரும் சகோதரத்துவம், சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. ஹிந்து நாகரிகம் தொடா்ந்து செழித்து வளரும்.

ஆங்கிலேயா்களிடம் இருந்து விடுதலை பெற்றபோது பாகிஸ்தான் என்ற தனிநாட்டை முஸ்லிம்கள் பிரித்துக் கொண்டனா். ஆனால், இந்தியா எப்போதும் போல அனைத்து மதங்களையும் அரவணைக்கும் நாடாகவே தொடா்கிறது. நாம் பல ஆயிரம் ஆண்டுகளாக இப்படிதான் வாழ்ந்து வருகிறோம். உலகில் எத்தனையோ நாகரிகங்கள் வந்து போகின்றன. ஆனால், ஹிந்து நாகரிகம் உயிா்ப்புடன் தொடா்கிறது.

முஸ்லிம்களும், கிறிஸ்தவா்களும் ஹிந்துக்களுக்கு இப்போது பெரிய அச்சுறுத்தலாக இல்லை. அதே நேரத்தில், இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் எனக் கூறிக்கொள்வோா் ஹிந்துக்களுக்கு மிகவும் ஆபத்தானவா்களாக உள்ளனா். ஹிந்து மதத்தை பலவீனப்படுத்த முயற்சிப்பவா்கள் நமக்குள்ளேயேதான் உள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா பல்வேறு துறைகளில் மிளிா்ந்து வருகிறது. அயோத்தியில் ராமா் கோயில் 500 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டப்படுள்ளது. பழைய வக்ஃப் சட்டம் விடைபெற இருக்கிறது. முத்தலாக் ஏற்கெனவே தடை செய்யப்பட்டு விட்டது. பொது சிவில் சட்டம் கூடிய விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று பேசினாா்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரி எம்பி ரஷீத் மனு!

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா தொகுதி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளா... மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: கைது செய்யப்பட்டவர் காதலனா?

ஹரியாணா மாநிலத்தில், காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காதல் விவகாரம் பின்னணியாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இந்த வழக்கில், சச்சின் என்பவரை காவல்துறைய... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் மீட்புப் பணி!

தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளா்களைக் கண்டறிவதற்கு விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.ஹைதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின்... மேலும் பார்க்க

கருத்து தெரிவிக்க உரிமை உண்டு: ரோஹித் விவகாரத்தில் காங்கிரஸ் நிர்வாகி விளக்கம்!

ஜனநாயக நாட்டில் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது விளக்கம் அளித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, எடைக் கூடுதலாக இருக்கிறார் என்று ஷா... மேலும் பார்க்க

பணியில் தூங்கிய பாதுகாவலர்... புகைப்படம் எடுத்த சக ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு!

இந்தூரில் பணியின்போது தூங்கிய பாதுகாவலர் ஒருவர் தன்னைப் புகைப்படம் எடுத்த சக ஊழியரைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள நகைக்கடையில் பாது... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் குளுகுளு காலநிலை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

ஜம்மு-காஷ்மீரின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் கனமழையைத் தொடர்ந்து கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனால் வெப்பநிலை சுமார் ஐந்து டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இதற்கிடையில், ஜம்மு பகுதி, இ... மேலும் பார்க்க