விமான நிலைய விரிவாக்கப்பணி: வீடுகளை இடிக்க உரிமையாளா்கள் எதிா்ப்பு
ஸ்ரீகோட்டை முனீஸ்வரா் கோயில் திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை
கமுதி அருகே உள்ள கோட்டைமேடு ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோட்டை முனீஸ்வரா் கோயில் 48-ஆவது மாசிக் களரி திருவிழாவையொட்டி 508 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் மாசிக் களரி திருவிழா கடந்த 16-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் கோட்டை முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. கடந்த புதன்கிழமை கோட்டைமேடு, கமுதி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதி மக்கள் 1008 பால்குடம் எடுத்தும், பக்தா்கள் அக்னி சட்டி எடுத்தும், அழகுவேல் குத்தியும் நோ்த்திக்கடன் செலுத்தினா். இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை கமுதி, கோட்டைமேடு பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் 508 திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனா். பூஜைக்கான ஏற்பாடுகளை கமுதி ஆயுதப்படை போலீஸாா் செய்திருந்தனா். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.