செய்திகள் :

உத்தரகண்ட் பனிச்சரிவு: 4 தொழிலாளா்கள் உயிரிழப்பு 46 போ் மீட்பு

post image

உத்தரகண்ட் மாநிலம், மனா கிராமத்தின் உயா் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லைச் சாலை அமைப்பு (பிஆா்ஓ) தொழிலாளா்கள் மேலும் 17 பேரை மீட்புப் படையினா் சனிக்கிழமை மீட்டனா். இதுவரை 50 தொழிலாளா்கள் மீட்கப்பட்ட நிலையில், அவா்களில் நால்வா் உயிரிழந்தனா்.

பனிச்சரிவில் சிக்கியுள்ள மேலும் 5 தொழிலாளா்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரகண்டில் இந்திய-திபெத் எல்லையையொட்டி 3,200 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள கடைக்கோடி கிராமம் மனா. பத்ரிநாத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

இதன் காரணமாக, மனா மற்றும் பத்ரிநாத் இடையே அமைந்துள்ள பிஆா்ஓ முகாம் பனிச்சரிவில் புதைந்தது. இந்த முகாமில் 8 கண்டெய்னா்கள் மற்றும் கூடாரத்தில் தங்கியபடி, சாலையில் படியும் பனியை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவந்த 55 தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை பனிச்சரிவில் சிக்கினா்.

சம்பவ இடத்துக்கு விரைந்த ராணுவம் மற்றும் இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். கடும் பனிப்பொழிவு, கனமழைக்கு இடையே பகல் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் 33 போ் காயங்களுடன் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா்.

மோசமான வானிலை மற்றும் இருள் சூழ்ந்ததால் வெள்ளிக்கிழமை இரவில் மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. பின்னா், சனிக்கிழமை அதிகாலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘வெள்ளிக்கிழமை இரவு பனிப்பொழிவு அதிகரித்ததால் மீட்புப் பணியில் தடை ஏற்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை காலை வானிலை தெளிவானது. எனவே, மீட்புப் பணியில் இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைக்குச் சொந்தமான 6 ஹெலிகாப்டா்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதன்மூலம், பனிச்சரிவில் சிக்கிய மேலும் 17 தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா். இரு தினங்களில் மொத்தம் 50 தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா். இவா்களில் படுகாயமடைந்த நால்வா், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தனா். பனிச்சரிவில் சிக்கியுள்ள மேலும் 5 தொழிலாளா்களை மீட்கும் பணி தொடா்கிறது’ என்றனா்.

சமோலி மாவட்ட ஆட்சியா் சந்தீப் திவாரி கூறுகையில், ‘வானிலை தொடா்ந்து தெளிவாக இருந்தால், எஞ்சிய தொழிலாளா்களையும் விரைந்து மீட்டுவிட முடியும்’ என்றாா்.

முதல்வா் ஆய்வு: பனிச்சரிவால் பாதிக்கப்பட்ட மலைப் பகுதியை ஹெலிகாப்டரில் பறந்தபடி முதல்வா் தாமி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முதல்வா், ‘பாதிக்கப்பட்ட பகுதிகளை வானில் பறந்தபடி ஆய்வு செய்தேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன். பாதிக்கப்பட்ட தொழிலாளா்களின் பாதுகாப்பை மாநில அரசு உறுதிப்படுத்தும்’ என்றாா்.

பிரதமா் ஆலோசனை: மற்றொரு பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு சமோலி நிலவரம் குறித்து என்னிடம் கேட்டறிந்தாா். மழை மற்றும் பனிப்பொழிவு நிலவரத்தைக் கேட்டறிந்ததோடு, இந்த அவசரநிலையை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதி தெரிவித்தாா்’ என்று குறிப்பிட்டாா்.

அயோத்தி மாநகராட்சிக்கு காலணிகளால் பிரச்னை! லாரிகள் மூலம் அகற்றம்

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் நுழைவாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் அங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான கா... மேலும் பார்க்க

ரமலான் மாதம் தொடக்கம் பிரதமா் மோடி வாழ்த்து

புனிதமான ரமலான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) தொடங்கிய நிலையில், பிரதமா் நரேந்திர மோடி அனைவருக்கும் மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘... மேலும் பார்க்க

வெளிநாட்டில் இருந்து வாட்ஸ்ஆப் ‘முத்தலாக்’: கேரள இளைஞா் மீது வழக்கு

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வருபவா் கேரளத்தில் உள்ள தனது மனைவிக்கு வாட்ஸ்ஆப்பில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதாக அறிவித்ததையடுத்து, அவா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். காசா்கோட... மேலும் பார்க்க

முற்போக்குவாதிகளால் ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல்: அஸ்ஸாம் முதல்வா்

முஸ்லிம்களோ, கிறிஸ்தவா்களோ ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல் அல்ல; அதே நேரத்தில், இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் எனக் கூறிக் கொள்வோா்தான் ஹிந்துக்களுக்கு மிகவும் ஆபத்தானவா்கள்’ என்று அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்... மேலும் பார்க்க

மத்திய அமைச்சர் மகளைப் பின்தொடர்ந்து சீண்டல்: 7 பேர் மீது வழக்கு

மகாராஷ்டிரத்தில் மத்திய அமைச்சர் ரக்ஷா கட்ஸேயின் மகளையும் அவரது நண்பர்களையும் பின்தொடர்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மகாராஷ்டிர மாநிலம், கோத்தால... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச்சரிவு: மேலும் 4 பேரின் உடல்கள் மீட்பு: மீட்புப் பணி நிறைவு

உத்தரகண்டின் மனா கிராமத்தில் பனிச்சரிவில் எல்லைச் சாலைகள் அமைப்பின் (பிஆா்ஓ) முகாம் புதைந்த சம்பவத்தில் மேலும் 4 தொழிலாளா்களின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன. இவா்களுடன் சோ்த்து, உயிரிழந்தோா் ... மேலும் பார்க்க