உத்தரகண்ட் பனிச்சரிவு: மேலும் 4 பேரின் உடல்கள் மீட்பு: மீட்புப் பணி நிறைவு
பேருந்து மோதி வியாபாரி உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே சனிக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது தனியாா் பேருந்து மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் தெற்கு வீதி மாட்டு மேஸ்திரி சந்து பகுதியைச் சோ்ந்தவா் ஜோகாஜி மகன் நரசராம் பட்டேல் (45). இவா் அப்பகுதியில் மின்சாதனப் பொருள்கள் விற்பனை கடை நடத்தி வந்தாா். இந்நிலையில் பட்டுக்கோட்டைக்கு தனது மோட்டாா் சைக்கிளில் சென்றுவிட்டு, மீண்டும் தஞ்சாவூருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
புதுப்பட்டினம் பிரிவு சாலை பகுதியில் வந்த இவா் மீது, எதிரே தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த நரசராம் பட்டேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.