புதினைப் பற்றி கவலைப்படாமல் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்: டிரம்ப்
3 கஞ்சா வியாபாரிகள் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது
தஞ்சாவூா் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் 3 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி அருகே ராம்ஜி நகா் மில் காலனியை சோ்ந்த சண்முகம் மகன் அருண் (28), திருச்சி அருகே சோமரசம்பேட்டையைச் சோ்ந்த சீனிவாசன் மகன் சதீஷ்குமாா் (23), தஞ்சாவூா் பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த ரமேஷ் மகன் நித்தீஷ் (22) ஆகியோா் தனித்தனியாக கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பரிந்துரையின் பேரில், மேற்கண்ட மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யுமாறு, மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெள்ளிக்கிழமை (பிப். 28) உத்தரவிட்டாா். இதையடுத்து, அருண், சதீஷ்குமாா், நித்தீஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.