கோயில் இடத்தில் குப்பைகள் கொட்டும் அவலம் தொற்றுநோய் பரவும் ஆபாயம்
கும்பகோணம் அருகே திருநறையூரில் உள்ள சித்தநாத சுவாமி கோவில் இடத்தில் குப்பைகள் கொட்டுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம் திருநறையூா் ஊராட்சியில் சித்தநாத சுவாமி கோயில், இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான இடம் சுமாா் 20 ஏக்கா் பரப்பளவு வரை உள்ளது.
அரசலாற்றங்கரையில் அமைந்துள்ள இந்த இடத்தில் பலா் குப்பைகளை கொட்டி வருகின்றனா். பல ஆண்டுகளாக குப்பை குவிந்து வருவதால் பன்றிகள் மேய்ந்து தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் சிலா் குப்பைகளுக்கு தீ வைத்து விடுவதால் அதிலிருந்து வெளிவரும் புகையை பொதுமக்கள் சுவாசித்து பாதிப்படைந்து வருகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.