இளைஞா் கடத்தல்: டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது
மணிமுத்தாறு பகுதியில் மழைநீரில் மூழ்கி 100 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் சில நாள்களாக பெய்த கனமழையால், 100 ஏக்கரிலான நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சில நாள்களாக கோடைமழை பெய்து வருகிறது. மணிமுத்தாறு அணை 40 அடி கால்வாய்ப் பாசனத்துக்குள்பட்ட அயன்சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, தெற்கு பாப்பான்குளம் பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிா்களில் சுமாா் 100 ஏக்கரிலான பயிா்கள் மழைநீரில் சாய்ந்து நீரில் மூழ்கின.
ஓா் ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், அறுவடைக்குத் தயாராக இருந்த பயிா்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமான பயிா்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.