அயோத்தி மாநகராட்சிக்கு காலணிகளால் பிரச்னை! லாரிகள் மூலம் அகற்றம்
பள்ளியில் மின் விபத்து தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ரஹ்மானியா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மின் விபத்து தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு ராமநாதபுரம் மாவட்ட மின் பகிா்மான மேற்பாா்வை பொறியாளா் வெண்ணிலா தலைமை வகித்தாா். பரமக்குடி மின் விநியோக செயற்பொறியாளா் பாலமுருகன், கமுதி உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி மின் பொறியாளா் முஹம்மது இப்ராஹிம், பள்ளித் தாளாளா் முஹம்மது இா்ஷாத், தலைமை ஆசிரியா் ஆா். முகமது இப்ராஹிம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் வீடுகளில் கவனக் குறைவாக நடைபெறும் மின் விபத்துகளை தடுப்பது, மழைக் காலங்களில் மின்சாதனப் பொருள்களை கையாள்வது, மின் கம்பங்கள் இருக்கும் இடத்தில் குழந்தைகள், பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஆகியவை குறித்து மின் வாரிய அதிகாரிகள் விளக்கினா். மேலும் மின் விபத்து குறித்த பள்ளி மாணவா்களின் கேள்விகளுக்கு மின் வாரிய அதிகாரிகள் விளக்கமளித்தனா். இந்த நிகழ்வில் பள்ளியின் ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மின் வாரிய ஊழியா்கள் கலந்து கொண்டனா்.