வெளிநாட்டில் இருந்து வாட்ஸ்ஆப் ‘முத்தலாக்’: கேரள இளைஞா் மீது வழக்கு
ஸ்ரீபேச்சியம்மன் கோயில் திருவிழா: பூக்குழி இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்
முதுகுளத்தூரை அடுத்த சோனைப் பிரியான் கோட்டை ஸ்ரீபேச்சியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தா்கள் வெள்ளிக்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்தக் கோயிலில் மாசிக் களரி திருவிழா கடந்த 25- ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நாளான வெள்ளிக்கிழமை பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக கடந்த 15 நாள்களாக விரதம் இருந்த பக்தா்கள் ஊரின் எல்லையில் உள்ள காளியம்மன் கோயிலில் இருந்து அக்னி சட்டி, பால்குடம் எடுத்து கிராமத்தைச் சுற்றி வந்து சூந்தாளமூா்த்தி சமேத பேச்சியம்மன் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இந்த விழாவில் முதுகுளத்தூா், இதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
விழா ஏற்பாடுகளை சோனைப் பிரியான்கோட்டை கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.