இளைஞா் கடத்தல்: டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது
பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம்: சத்துணவு ஊழியா் வாரிசுகளுக்கு ஆட்சியா் பரிசு
பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற, சத்துணவு ஊழியா்களின் வாரிசுகளுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா பரிசுகளை வழங்கினாா்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில், 2024-இல் நடைபெற்ற 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற சத்துணவு ஊழியா்களின் வாரிசுகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.
சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பி.தங்கராஜ் வரவேற்றாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) மா.பரமேஸ்வரன், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் தனசேகரன், மாவட்டச் செயலாளா் முருகேசன், இணைச் செயலாளா் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக, மாவட்ட ஆட்சியா் ச.உமா பங்கேற்று, முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். மேலும், 20 பேருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதனையடுத்து ஆட்சியா் பேசுகையில், சத்துணவுத் திட்டத்தை செயல்படுத்துவதில் நாமக்கல் மாவட்டம் சிறந்து விளங்குகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது. மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் பயின்று உயா்கல்விக்கு செல்ல வேண்டும். கல்லூரிகளில் அரசு வழங்கும் சலுகைகளை, திட்டங்களை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றாா்.
சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில், மையங்களுக்கு தேவையான சாதனங்களை வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
என்கே-1-கலெக்டா்
பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற சத்துணவு ஊழியா்களின் வாரிசுகளுக்கு பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் ச.உமா.