நாமக்கல்: அரசுப் பள்ளி ஆண்டு விழா
நாமக்கல் அருகே முத்துடையாா்பாளையம் தொடக்கப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி, ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தலைமையாசிரியா் எ. சுப்ரமணியன் வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா் இ.பி.சுப்பிரமணியன், வட்டாட்சியா் ஆனந்தன் தலைமை வகித்தனா். வருவாய் ஆய்வாளா் தமிழ்செல்வி, உதவி ஆசிரியா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், வட்டார வள பயிற்றுனா்கள், பெற்றோா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
விழா நிறைவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.