செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைனில் அடையாள அட்டை: தெற்கு ரயில்வே தகவல்

post image

மாற்றுத்திறனாளி பயணாளிகள், ரயில்வே சலுகை பயணச்சீட்டு அடையாள அட்டை பெறுவதற்கு புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள திவ்யங்ஜன் இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ரயிலில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளி பயணாளிகளுக்கு 25 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து சலுகை கட்டணத்திற்கான அடையாள அட்டையை பெற்றிருக்க வேண்டும். இதற்காக, அரசு மருத்துவர் வழங்கும் மருத்துவ சான்றிதழை பயன்படுத்தி சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் கோட்ட ரயில்வே அலுவலகங்களில் உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்து அடையாள அட்டை பயன்படுத்தும் முறை வந்தது. இதற்காக கோட்ட ரயில்வே அலுவலகங்களில் பயணாளிகள் உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட அலுவலர்களின் பரிசீலனைக்கு பின்னர் அடையாள அட்டை வழங்கப்படும்.

இந்த நிலையில், மாற்றுத்திறனாளி பயணிகள் ரயில்வே சலுகை அடையாள அட்டைகளைப் பெறுதல் மற்றும் புதுப்பித்தலில்

ஏற்படும் சிரமங்களை போக்கும் நடவடிக்கையாக, அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து அடையாள அட்டையை பெறுவதற்காக திவ்யங்ஜன் என்ற புதிய இணையதளத்தை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நடைமுறை தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் என 6 கோட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |மதுரையில் மேம்பால இரும்பு சாரம் சரிந்து விபத்து: 4 பேர் காயம்

இதன் மூலம் மாற்றுத்திறனாளி பயணிகள் ரயில்வே சலுகை அடையாள அட்டைகளை பெறுவதற்கு, புதுப்பிப்பதற்கும் https://divyangjanid.indianrail.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

உரிய பரிசீலனைக்கு பின்னர், அடையாள அட்டையை இணையதளம் மூலம் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என ரயில்வே தெரிவித்துள்ளது.

இதனை பயன்படுத்தி ரயில்வே பயணச்சீட்டு பதிவு அலுவலகங்கள், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக(ஐஆர்சிடிசி) வாயிலாக பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளளாம்.

மேலும் பயணச்சீட்டு பதிவு அலுவலகங்கள் மற்றும் யுடிஎஸ் செயலி வாயிலாக முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

ரயில்வே பயணச்சீட்டு சலுகை அடையாள அட்டைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பார்வை குறைபாடு மற்றும் பார்வை முழுமையாக இல்லாதவர்கள், மனநலம் பாதித்தவர்கள், செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு உள்ளவர்கள், எலும்பியல் ஊனமுற்றோர், முடக்குவாத நோயாளிகள், பாதுகாவலரின் உதவியின்றி பயணிக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இந்த வாரம் ஓடிடியில் 6 தமிழ் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் 6 தமிழ் படங்கள் வெளியாகின்றன. எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் நெட்ஃபிளி... மேலும் பார்க்க

பாம்பு கடித்த சிறுமியை டோலியில் அழைத்துச்சென்ற அவலம்.. வழியிலேயே பலியான சோகம்!

பென்னாகரம்: பென்னாகரம் அருகே கோட்டூர் மலை கிராமத்தில் பாம்பு கடித்த சிறுமியை டோலி கட்டி 8 கிலோமீட்டர் தொலைவிற்கு எடுத்துச் சென்ற நிலையில், சிறுமி வழியிலேயே பலியானார்.தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே... மேலும் பார்க்க

அரசியல் நான்தான் சூப்பர் ஸ்டார்: சீமான்

அரசியல் நான்தான் சூப்பர் ஸ்டார் என்று மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.1989-ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 ஆம் தேதி, மாவீரர் நாள் அனுசரிக்கப... மேலும் பார்க்க

தொடர் கனமழை, அச்சுறுத்தும் புயல் : கோடியக்கரையில் படகுகளை பாதுகாக்கும் மீனவர்கள்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந் த கனமழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், அச்சுறுத்தும் புயலின் காரணமாக கோடியக்கரை கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்... மேலும் பார்க்க

ஆர்டிஎஸ்ஓ ஒப்புதல் இல்லாமல் பாம்பன் பாலம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன?

பாதுகாப்பு விதிகளை புறக்கணித்து பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், தர நிர்ணய அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன? என மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி... மேலும் பார்க்க

6 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்!

தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு நாளை(நவ. 29) அதி கனமழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கையை (ரெட் அலர்ட்) சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்த்த ... மேலும் பார்க்க