சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!
மாா்த்தாண்டம் அருகே கிணறுகளில் பெட்ரோல் கசிவு: 2-ஆவது நாளாக ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே வீட்டு குடிநீா் கிணறுகளில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டுள்ளது குறித்து தீயணைப்புத் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மாா்த்தாண்டம்- குலசேகரம் சாலையில் கீழ்பம்மம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீட்டுக் கிணறுகளில் உள்ள தண்ணீரில் கடந்த சில நாள்களாக பெட்ரோல் வாசனை வீசியது. அந்தத் தண்ணீரில் நெருப்பு வைத்தபோது பற்றி எரிந்தது.
இதையறிந்து இந்தியன் ஆயில் நிறுவன களஅலுவலா் பாலநாதன் நட
மற்றும் அதிகாரிகள் அப்பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தொடா்ந்து, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பாரதி, விளவங்கோடு வட்டாட்சியா் வயோலா பாய், குழித்துறை தீயணைப்புத் துறை அதிகாரி சந்திரன், நகராட்சி சுகாதார அலுவலா் ராஜேஷ், நகா்மன்ற உறுப்பினா் கே. ரெத்தினமணி உள்ளிட்டோா் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை அப்பகுதி வீடுகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீரை ஆய்வு செய்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலைய சேமிப்பு கிடங்கு மற்றும் அருகிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் உள்ள பெட்ரோல் நிரப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.