செய்திகள் :

முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்: மோடி வலியுறுத்தல்

post image

புதுதில்லி: தில்லி பேரவைத் தேர்தலையொட்டி, முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளம் வாக்காளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம் என தெரிவித்துள்ளார்.

தில்லி பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்.5) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மும்முனைப்போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், காங்கிரஸும் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டன.

1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரையில் நடைபெறுகிறது.

தில்லி பேரவைத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

இந்த நிலையில், முதல் முறையாக இளம் வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

தில்லி பேரவைக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்று வருகிறது. "இந்த ஜனநாயகத் திருவிழாவில் தில்லி வாக்காளர்கள் அனைவரும் முழு ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது மதிப்புமிக்க வாக்குகளைப் பதிவு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளம் வாக்காளர்களுக்கு எனது வாழ்த்துகள். இதனை நினைவில் கொள்ளுங்கள் - முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்” என கூறியுள்ளார்.

2015 முதல் தில்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பாஜக தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: விண்ணப்பிக்க பிப். 21 வரை அவகாசம்!

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 21ஆம் தேதி மாலை 6 மணி வரை அவகாசம் அளித்து மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் உத்தரவிட்டுள்ளது. முன்பு பிப். 11ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? மாணவர்களே எச்சரிக்கை

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 15ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.பொதுவாகவே பொதுத் தேர்வுகள் என்றாலே பதற்றமாகத்தான்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டால் கத்தக்கூடாது! தப்புவது எப்படி?

பொதுவாக விபத்துகளின்போதுதான் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாவார்கள். ஆனால், தற்போது சாலை விபத்துகளைப் போலவே கூட்ட நெரிசலும் அதிகரித்து, அதனால் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.அண்மையில், புஷ்பா வெளியான த... மேலும் பார்க்க

மகா கும்பமேளா 'மரண' கும்பமேளாவாக மாறிவிட்டது! - மமதா பானர்ஜி

பிரயாக் ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா, மரண கும்பமேளாவாக மாறிவிட்டது என கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மிகப்பெரிய ஆன... மேலும் பார்க்க

யார் இந்த ஞானேஷ் குமார்? ஜம்மு - காஷ்மீர், அயோத்தி விவகாரங்களில் முக்கிய பங்காற்றியவர்...

புதிதாக நியமிக்கப்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றியுள்ளார்.தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்றுடன் ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்த மோடி அரசு: கார்கே

பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, இந்தியர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே... மேலும் பார்க்க