கோவை: லாட்டரி மார்ட்டின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!
`முதல்வரும், அமைச்சர்களும் சம்பளத்தை விட்டுக்கொடுப்பார்களா?' - கேள்வி கேட்கும் அரசு ஊழியர்கள் சங்கம்
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருவோம் என்று கூறிய தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், இப்போது வரை எந்த நடவடிக்கையையும் எடுக்காததை கண்டித்துள்ளது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதை கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், "எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவார் என்றால், அவருக்கு 2026-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிக்க நாங்கள் தயார். அவரை ஆட்சிக்கட்டிலில் வைத்து அழகு பார்த்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்தது தான் அவரது மூன்றாண்டு கால சாதனை ஆகும்.
எங்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதிய உயர்வு உள்ளிட்டவை பற்றி பேசும்போது, நிதி நிலை மோசமாக உள்ளது என்று கூறுகிறார்கள். நிதி நிலை மோசமாக உள்ளது என்றால் அது சரியாகும் வரை எங்களுக்கு ஊதியம் வேண்டாம் என்று முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பார்களா?
நிதி நிலை மோசமாக இருக்கிறது என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்திய ஆட்சிப் பணியில் இருக்கும் உயர் அலுவலர்கள், அவர்களுடைய ஊதியத்திலிருந்து 10 சதவிகிதத்தை விட்டுக் கொடுப்பார்களா?" என்று கேள்வி எழுப்பி பேசியுள்ளனர்.