செய்திகள் :

மேட்டூர் அணை நீர்மட்டம் 104.76 அடியாக உயர்வு!

post image

மேட்டூர் அணைக்கு நீர்மட்டம் சனிக்கிழமை காலை 104.76 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு சனிக்கிழமை காலை (அக்.26) முதல் வினாடிக்கு 7,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,500 கன அடியாக குறைக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 102.92 அடியில் இருந்து 104.76 அடியாக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க |புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 31,575 கன அடியிலிருந்து வினாடிக்கு 33,148 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்குதிறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 7,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 71.148 டிஎம்சியாக உள்ளது.

கருணாநிதி ஆட்சியில் தொடங்கிய மெட்ரோ திட்டத்தால் சென்னை மக்கள் பயன்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தொடங்கிய மெட்ரோ திட்டத்தால் சென்னை மக்கள் பயனடைந்து வருகிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். சென்னை, நந்தனத்திலுள்ள சென்னை மெட்... மேலும் பார்க்க

மதுரையில் மழைநீரை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது: முதல்வர் ஸ்டாலின்

மதுரையில் 8 பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. மழைநீரை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்ததையொட்டி ம... மேலும் பார்க்க

மன அழுத்தத்தை போக்க காவலர்களுக்கு உடற்பயிற்சி, விளையாட்டுப் போட்டிகள்!

கோவை: காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க பல்வேறு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை கோவை மாநகர காவல்துறை சனிக்கிழமை நடத்தியது. காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படு... மேலும் பார்க்க

ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி காட்டு ராஜா யானை!

கோவை: கோவை செம்மேடு, ஆலங்குட்டை பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றைக் காட்டுயானை சிறுவாணி காட்டு ராஜா சனிக்கிழமை நடைப் பயிற்சிக்கு செல்வது போன்று ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி காட்டு ராஜாவை வனப்பகுதி... மேலும் பார்க்க

கார் டயர் வெடித்து விபத்து: 9 மாத குழந்தை பலி

சேலம்: சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்தம்பட்டி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானத்தில் 9 மாத குழந்தை பலியானது. படுகாயமடைந்த பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சேலம்-சென... மேலும் பார்க்க

மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்: விஜய் ட்வீட்

நாளை நமது மாநாட்டில் சந்திப்போம்.மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம் என சனிக்கிழமை தொண்டா்களுக்கு, அந்த கட்சியின் தலைவா் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக தவெக தொண்டா்களுக்க... மேலும் பார்க்க