செய்திகள் :

வேலூர்: 9 ஆண்டுகளாக இயங்காமல் இருக்கும் மாநகராட்சி திறந்தவெளி கடைகள்.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

post image

வேலூர் மாநகராட்சி அண்ணா சாலை அருகே அமைந்துள்ள பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள திறந்தவெளி மேடைக்கடைகள் கடந்த 9 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கின்றன. வேலூர் மாநகராட்சியில் பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் கடந்த 2015-16 ஆம் நிதி ஆண்டில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.82.90 லட்சம் மதிப்பீட்டில் தரைக்கடை வியாபாரிகள் கடைகள் அமைக்க திறந்தவெளி மேடைக்கடைகள் அமைக்கப்பட்டன. இந்தக் கடைகள் கட்டப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்த பகுதி பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.

வேலூர் பழைய மீன் மார்க்கெட் வளாகம் போதிய இட வசதி இல்லாத காரணத்தினால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டு, வேலூரில் மக்கான் பகுதியில் புதிய மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டது. இதையடுத்து பழைய மீன் மார்க்கெட் வளாகம் இருந்த இடத்தில் மாநகராட்சிக்கு வருமானம் ஈட்டும் வகையில் ஆய்வு செய்யப்பட்டு, அண்ணா சாலையில் உள்ள தரைக்கடை வியாபாரிகளுக்கு கடைகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 2015-16 ஆம் நிதியாண்டில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.82.90 லட்சத்தில் 250 கடைகள் கட்டப்பட்டன. கடைகள் அனைத்திலும் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு தகர மேற்கூரைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு கடையும் 6 அடி நீளமும், 3 அடி அகலமும் கொண்டதாக பிரித்து அண்ணா சாலையில் உள்ள தரைக்கடை வியாபாரிகள் கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு உண்டான கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மேலும் அந்த வளாகத்தில் கழிவறை வசதியும் ஏற்படுத்தப்பட்டன.

இதனால் அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் தரைக்கடை வியாபாரிகள் தனி வளாகத்திற்கு செல்வதால் அண்ணா சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திறந்தவெளி மேடைக்கடைகள் செயல்படுத்தப்பட்ட சில நாள்களிலேயே மீண்டும் வியாபாரிகள் சாலையிலேயே வியாபாரம் செய்ய தொடங்கினர். திறந்தவெளி மேடைக்கடைகள் வளாகத்தில் போதிய அளவில் வியாபாரம் நடைபெறவில்லை என கூறி, வியாபாரிகள் அனைவரும் மீண்டும் சாலையிலேயே கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய தொடங்கினர். மீண்டும் அவர்கள் அங்கு செல்லாததால் அந்த வளாகம் பயன்பாட்டில் இல்லாமல் பாழடைந்து வருகின்றது.

இது குறித்து அந்த பகுதியில் தரைக கடைகள் அமைத்துள்ள வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது, “இந்தக் கடைகள் பயன்பாட்டிற்கு வந்தால் நல்லதுதான். கொஞ்ச நாளுக்கு வியாபாரம் டல்லா தான் இருக்கும். அதன் பிறகு மக்கள் வர ஆரம்பிச்சிடுவாங்க. வியாபாரம் நல்லா தான் நடக்கும். ஆனால் இந்தக் கடை வளாகத்தில் மின்சார வசதியும் கடை பொருளுக்கு பாதுகாப்பும் ஏற்படுத்தி தர வேண்டும். கடைகள் வியாபாரிகளுக்கு ஒதுக்குவதை பாராபட்சம் இல்லாமல் பொதுவான முறையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.” என்று கூறினார்.

மேலும் பொதுமக்கள் ஒருவரிடம் கேட்டபோது, “பயன்படுத்தாமல் இருக்கும் இந்தக் கடை வளாகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர மேற்கூரைகள் எல்லாம் சீரமைத்து, கழிவறை வசதிகள் எல்லாம் ஏற்படுத்தி கொடுத்தால் பொது மக்கள் இந்த வளாகத்திற்கு வந்து செல்வதற்கு சுலபமாக இருக்கும். இதனால் இந்த சாலையில் மக்கள் அனைவரும் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் சென்று வர முடியும்” என்று கூறினார்.

செயல்படாமல் இருக்கும் திறந்தவெளி மேடைக்கடைகள் குறித்து வேலூர் மாநகராட்சியின் ஆணையரிடம் கேட்டபோது, ``2015-16ஆம் நிதி ஆண்டில் இந்த திறந்தவெளி கடைகள் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்டு சில நாட்கள் செயல்படுத்தப்பட்டது. ஆனால் தொடர்ந்து வியாபாரிகள் அங்கு வியாபாரம் செய்ய முன் வராததால் அங்கு திறந்தவெளி கடைகள் வளாகம் செயல்படுத்த முடியாமல் போனது. இதனை பற்றி வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் வியாபாரிகளுக்கான கூட்டம் நடத்தி ஆலோசிக்கப்பட்டு உள்ளது. வியாபாரிகள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை மீண்டும் திறந்தவெளி மேடைக்கடை வளாகத்தில் வியாபாரம் செய்ய தேவையான முயற்சிகள் எடுக்கிறோம்” எனக் கூறினார்.

TVK Vijay: நடிகர் விஜய்யின் அரசியல் மாநாடு; - S.A.C பூர்வீக ஊர் மக்கள் ஷேரிங்ஸ்

அரசியல் களத்துக்குள் விஜய் வரப்போகிறார் என்ற தகவல்கள் பேசப்பட்டபோதே பல்வேறு விவாதங்கள் தொடங்கியது. தொடர்ந்து, அரசியல் தொடர்பான படங்களில் நடித்தும், அவ்வப்போது சினிமா மேடைகளில் அரசியல் பேசியும் தன்னுடை... மேலும் பார்க்க

TVK: 'பிஸ்கட், ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டில்..' - மாநாட்டிற்குத் தயாராகும் 8.5 லட்சம் சிற்றுண்டி கிட்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை (அக்டோபர் 27) நடைபெறவிருக்கிறது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலுள்ள வி. சாலையில் நடக்கும் இந்த பிரமாண்டமான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பணிகள... மேலும் பார்க்க

TVK: விஜய்க்குப் பாதுகாப்பு வழங்கும் துபாய் நிறுவனம்; பின்னணி என்ன?

நடிகர் விஜய்யின் த.வெ.க., கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (அக்டோபர் 27) நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டுக்குப் பாதுகாப்பு வழங்க துபாயைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பவுன்சர்களை விஜய் நியமித்திருக்க... மேலும் பார்க்க

TVK: "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த்... இப்போது நான்!" - விகடனுக்கு அன்றே சொன்ன விஜய் | Flashback

விஜய்யின் த.வெ.க வின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி (நாளை) நடக்கவிருக்கிறது. மாநாட்டிலிருந்துதான் விஜய் தீவிரமாக அரசியலில் செயல்படவிருப்பதாக சொல்கிறார்கள். கடந்த பிப்ரவரியில்தான் விஜய் கட்சி... மேலும் பார்க்க

TVK Vijay: `அரசியலில், அவர் விருப்பம்தான் எங்களின் விருப்பமும்’ - மாநாட்டுக்கு வந்த பெங்களூரு ரசிகை

விஜய்யின் அரசியல் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகே இருக்கும் வி.சாலையில் நாளை நடைபெறவிருக்கிறது. மாநாட்டுக்கான பிரமாண்ட மாநாடு, இருக்கைகள், பிரமாண்ட கட்அவுட் என தீவிரமான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. நா... மேலும் பார்க்க

TVK: "நான் எதிர்க்கட்சியா.. கேள்வி கேட்பவனா இருப்பேன்.." - விஜய்யின் அரசியல் வசனங்கள் ரீவைண்ட்

தமிழக அரசியலும்... சினிமாவும்!தமிழ்நாட்டில் தி.மு.க-வின் வருகைக்குப் பின்னர் தமிழ்நாட்டு அரசியலும், தமிழ் சினிமாவும் இன்று வரை ஒன்றுக்கொன்று ஓட்டிப் பிணைந்திருக்கிறது. வலுவான சித்தாந்தம், மாற்றுக் கட்... மேலும் பார்க்க