செய்திகள் :

`பெண்கள் வலிமையற்றவர்கள் அல்ல...' - இரு விரல்களில் மினி பஸ்ஸை இழுத்து சாதனை படைத்த யோகா ஆசிரியர்

post image

திருவண்ணாமலை கிரிவல பாதையில் பெண்கள் முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு, ஐந்து டன் எடையுள்ள பேருந்தை இரு விரல்களால் 250 மீட்டர் இழுத்துச் சென்று, யோகா ஆசிரியர் ஒருவர் சாதனை படைத்திருக்கிறார்.

திருவண்ணாமலையில் தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்திய பெண்கள் முன்னேற்றம் மற்றும் சுற்றுப்புற சுகாதார பாதுகாப்பை வலியுறுத்தி யோகா மற்றும் சிலம்பம் பயிற்சியாளரான கல்பனா, ஐந்து டன் எடை கொண்ட மினி பஸ்சை 250 மீட்டர் இழுத்துச் சென்று சாதனை படைத்துள்ளார். அங்கிருந்த மக்கள் இவரை கைத்தட்டலுடன் உற்சாகப்படுத்தி ஊக்குவித்தனர்.

இந்நிகழ்ச்சி கிரிவல பாதையில் ராஜராஜேஸ்வரி கோயில் அருகில் தொடங்கி திருநேர் அண்ணாமலை திருக்கோயிலில் நிறைவடைந்தது. இதனை தனது இரு வலதுகை விரல்களை மட்டுமே பயன்படுத்தி மினி பஸ்சை இழுத்துச் சென்றார் என்பது பாராட்டிற்குரியது. இவர் எட்டு வருடங்களாக யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஓய்வு நேரங்களில் இலவசமாகவும் பயிற்சி அளிக்கிறார்.

இச்சாதனை குறித்து யோகா மற்றும் சிலம்பம் பயிற்சியாளரான கல்பனாவிடம் உரையாடுகையில், ``நாம் யோகா செய்வதன் மூலம் நமது மனதை ஒருநிலைப்படுத்தலாம். ஆகையால் நமது உடலில் சக்தி மேம்படும். மனிதனின் மனதையும் உடலையும் உற்சாகத்துடனும் வலிமையுடனும் வைத்திருக்க யோகா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்கள் எப்பொழுதும் தன்னம்பிக்கையுடனும் தைரியமாகவும் இருக்க வேண்டும். வலிமையோடு வாழ்க்கையில் போராடினால்தான் வரலாறு படைக்க முடியும். பெண்கள் என்பவர்கள் யாரும் யோசிக்காத அளவிற்கு வலிமை பெற்றவர்கள் என்பதற்கு சான்றாகவே இச்சாதனையை படைத்தேன்" எனக் கூறினார்.

பாலியல் வன்கொடுமையை தடுக்கும் விதமாக 2555 ஆணிகள் மீது 51 யோகாசனங்கள் செய்து யூனிவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்டில் இடம் பெற்றுள்ளார். உலக மகளிர் தினத்தன்று பெண்களை ஊக்குவிக்கும் வண்ணமாக தலைமுடியால் 1,500 கிலோ எடை கொண்ட காரை 400 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றார். உலகப் பொதுமறையான திருக்குறளை 4:15 மணி நேரத்தில் 1330 திருக்குறளையும் பின்னோக்கி எழுதியுள்ளார், இதனை கண்ணாடியில் பார்த்தால் முன்னோக்கி தெரியும். போதை பொருளை தடுக்கும் விதமாக இரு கண்களையும் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் 8 கிலோ மீட்டர் வரை கிரிவலம் சுற்றி வந்தார். மேலும் கின்னஸ் சாதனைக்காக தன்னை தயார்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Doctor Vikatan: கர்ப்பிணிகள், ஆட்டோ மற்றும் டூ வீலரில் பயணம் செய்யலாமா?

Doctor Vikatan: என்வயது 28. இப்போது நான் 2 மாத கர்ப்பமாக இருக்கிறேன். வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். டூ வீலரில் கணவருடன்தான்வேலைக்குப் போவது வழக்கம். இந்நிலையில் மாடிப்படிகளில் ஏறக்கூடாது, டூ வீல... மேலும் பார்க்க

Doctor Vikatan: புடவை கட்டும் பெண்களுக்கு புற்றுநோய் வருமா?

Doctor Vikatan: புடவை உடுத்துபவர்களுக்குபுற்றுநோய் வரும் என கடந்த சில தினங்களாக ஒரு செய்தி வைரலாகி கொண்டிருக்கிறது. அது எந்த அளவுக்கு உண்மை?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த கதிரியக்க புற்றுநோய் சி... மேலும் பார்க்க

Doctor Vikatan: இரட்டைக் குழந்தைகளின் அம்மாவுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்குமா?

Doctor Vikatan: எனக்கு சமீபத்தில்தான் பிரசவம் ஆகியிருக்கிறது. இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். என்னால் இரண்டு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுக்க முடியுமா என பயமாக இருக்கிறது. எனக்கு அந்த அளவ... மேலும் பார்க்க

Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகான உடல் பருமன்.... முன்கூட்டியே தவிர்க்க வழிகள் உண்டா?

Doctor Vikatan: நான்இப்போது 7 மாத கர்ப்பமாக இருக்கிறேன். முதல் மூன்று மாதங்களில் உடல் எடை அவ்வளவாகஅதிகரிக்கவில்லை. அதன் பிறகு எடை அதிகரிக்கத்தொடங்கியது. பிரசவத்துக்குப் பிறகு இந்த எடை குறையுமா என பயமா... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மகளிருக்கான பிரத்யேக `பிங்க்’ பூங்கா! - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

`மகளிர் பூங்கா’தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை சாலையிலுள்ள வ.உ.சி கல்லூரியின் முன்புறம் உள்ள பகுதியில், நமக்கு நாமே திட்டம் 2023 - 2024 கீழ் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் பெண்களுக்கென ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: மாதவிலக்கு நாள்களில் ஏற்படும் அந்தரங்க உறுப்பு அலர்ஜி... தீர்வு என்ன?

Doctor Vikatan: என் வயது 28. எனக்கு பீரியட்ஸ் நாள்களில் நாப்கின் உபயோகிப்பதால்அந்தரங்க உறுப்பைச் சுற்றிலும் அரிப்பு, எரிச்சல் ஏற்படுகிறது.வேலைக்குச் செல்லும் நிலையில் இது எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்... மேலும் பார்க்க