செய்திகள் :

மேயர், அவரின் கணவர் படுகொலை வழக்கு - 5 பேருக்கு மரண தண்டனை விதிப்பு; ஹைஅலர்ட்டில் சித்தூர்!

post image

ந்திர மாநிலம், சித்தூர் மாநகராட்சியில் கடந்த 2015-ம் ஆண்டு மேயராக இருந்தவர் அனுராதா. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இவரின் கணவர் கட்டாரி மோகன். கடந்த 17-11-2015 ஆம் ஆண்டு மாநகராட்சி அலுவலகத்தில் தனது அறையில் இருந்த மேயர் கட்டாரி அனுராதா கைத்துப்பாக்கியால் சுட்டப்பட்டு, அரிவாளாலும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மனைவியின் மரண ஓலம் கேட்டு அவரைக் காப்பாற்றுவதற்காக ஓடிவந்த கட்டாரி மோகனும் படுபயங்கரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

கணவர் மோகனுடன் மேயர் அனுராதா

சொத்து தகராறால் மேயர் தம்பதி தீர்த்துகட்டப்பட்டது தெரியவந்தது. இந்த படுகொலைகள் தொடர்பாக, மேயரின் தம்பி சிண்டு சந்திரசேகர் மற்றும் அவரின் கூட்டாளிகள் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

10 ஆண்டுகளாக இவ்வழக்கு விசாரணை சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த அக்டோபர் 24-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அன்றைய தினம், `சித்தூர் மாநகரத்தில் பொது மக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம்’ என்று 144 தடை உத்தரவையும் காவல்துறை பிறப்பித்திருந்தது.

அன்று, முதல் குற்றவாளியான சிண்டு சந்திரசேகர் மற்றும் அவரின் கூட்டாளிகள் வெங்கடாசலபதி, ஜெய்பிரகாஷ் ரெட்டி, மஞ்சுநாத், கங்கனப்பள்ளி வெங்கடேஷ் ஆகிய 5 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். குற்றம்சாட்டப்பட்டிருந்த மற்றவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

கைது
கைது

இதையடுத்து, `குற்றவாளிகள் 5 பேருக்கும் அக்டோபர் 31-ம் தேதி (இன்று) தண்டனை அறிவிக்கப்படும்’ என்று நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி, கொடூர கொலையாளிகளான சிண்டு சந்திரசேகர் உட்பட 5 பேருக்கும் `மரண தண்டனை’ விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியிருக்கிறார். இந்த அதிரடி தீர்ப்பு காரணமாக, சித்தூரில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி கார் வெடிப்பு: `Hyundai i20 கார், CCTV கேமராக்கள் ஆய்வு' - அமித் ஷா பேட்டி

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று (நவ 10) மாலை 6.50 ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: போலீஸ் கமிஷனருடன் அமித் ஷா பேச்சு; கார் வெடிப்பு குறித்து கெஜ்ரிவால் கவலை!

திங்கட்கிழமை (நவ. 10) மாலையில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே ஏற்பட்ட கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அருகாமையில் இருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.மெட்ரோ கேட் 1 அருகே கார... மேலும் பார்க்க

டெல்லி: செங்கோட்டை அருகே கார் வெடிப்பு; 8 பேர் பலி; நெஞ்சை உலுக்கும் வீடியோ - விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தால் அருகே இருந... மேலும் பார்க்க

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு; பெண் டாக்டர் காரில் ஏ.கே.47 ரக துப்பாக்கி பறிமுதல் - பகீர் பின்னணி!

ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு டாக்டர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் ரெய்டு நடத்தினர். இதில் படித்து உயர் பதவியில் ... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: அனைத்து வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த தவெக; 2 -ம் நாளாக சிபிஐ விசாரணை

ஆஜரான 12 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்கடந்த செப்டம்பர் 27-ம் தேதி த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பா... மேலும் பார்க்க

டெல்லி: `பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் ஆயுதங்கள் சப்ளை; தாக்குதல் நடத்த சதி' - தீவிரவாதிகள் கைது

டெல்லி அருகே ஜம்மு காஷ்மீர் போலீஸார் ரெய்டு நடத்தி 350 கிலோ வெடிமருந்துகளையும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் 20 ரிமோட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஹரியானாவில் உள்ள பரிதாபாத்தில் இதே போலீஸா... மேலும் பார்க்க