செய்திகள் :

மேற்கு வங்கம்: மத்திய அமைச்சா் தலைமையிலான பாஜக குழு தடுத்து நிறுத்தம்!

post image

மேற்கு வங்கத்தில் வன்முறை பாதிக்கப்பட்ட இடத்துக்குச் செல்ல முயன்ற மத்திய அமைச்சா் சுகாந்த மஜும்தாா் தலைமையிலான பாஜக குழு காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

மால்டா மாவட்டம் மோதாபாரி பகுதியில் அண்மையில் இரு வகுப்பினா் இடையே கடந்த வாரம் வன்முறை ஏற்பட்டது. இதில் வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன. தீவைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன. பலா் காயமடைந்தனா். இந்த வன்முறை தொடா்பாக 60-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். பல இடங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இணைய சேவையும் முடக்கப்பட்டது. பாதுகாப்புக்காக பெருமளவிலான காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக மத்திய அமைச்சரும், மாநில பாஜக தலைவருமான சுகாந்த மஜும்தாா் தலைமையிலான அக்கட்சி குழுவினா் ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.

ஆனால், மோதாபாரிக்கு 10 கி.மீ. முன்பாகவே அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, பாஜகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் மஜும்தாா் கூறியதாவது:

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டா்கள் போல காவல் துறையினா் செயல்படுகின்றனா். கிராம மக்கள் ராம நவமி பூஜை நடத்தக் கூடாது என்று காவல் துறையினா் உத்தரவிட்டுள்ளனா். இப்படி உத்தரவிட அவா்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. மக்கள் எவ்வித அச்சமுமின்றி ராம நவமியைக் கொண்டாட வேண்டும் என்றாா்.

இந்த வன்முறை தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஏப்ரல் 3-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கொல்கத்தா உயா் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொலைந்த, திருடுபோன செல்போன்களைத் திரும்பிப்பெற புதிய வெப்சைட்!

ரயில்களில் தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட செல்போன்கள் குறித்து புகாரளிக்க சி.இ.ஐ.ஆர். தளத்தைப் பயன்படுத்தலாம் என்று ரயில்வே பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ரயில்களில் தொலைந்துபோன செல்போன்களைக் கண்டற... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதியில் ஹிந்து மதச் சடங்குகள்: 3 பேர் கைது!

சம்பலில் உள்ள ஜாமா மசூதியில் ஹிந்து மதச் சடங்குகள் செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் இங்கு ஏற்பட்ட கலவரம்... மேலும் பார்க்க

அலகபாத் உயர்நீதிமன்றத்துக்கு 8 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 8 புதிய நீதிபதிகளை நியமிக்கும் முன்மொழிவுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலீஜியம் ஏப்ரல் 2ல் கூட்டம் ஒன... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா ஆதரவு: ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து 4-வது தலைவரும் விலகல்!

வக்ஃப் மசோதா ஆதரவு தெரிவித்ததால் ஐக்கிய ஜனதா தள (ஜேடியு) கட்சியில் இருந்து 4-வது தலைவரும் விலகுவதாகத் தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று (மார்ச் 3) அதிகாலை வக்ஃப் திருத்த மசோதா 2024 நிறைவேற்றப்பட்டத... மேலும் பார்க்க

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவுபெற்றது.மக்களவை கூட்டத்தொடர் இன்று காலை கூடியவுடன், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ... மேலும் பார்க்க

மமதா பானர்ஜி சிறைக்குச் செல்வது நிச்சயம்: பாஜக

மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சிறைக்குச் செல்வது நிச்சயம் என்றும், அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக தலைவர் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ல் நடந்த ஆசிரியர் நியம... மேலும் பார்க்க