செய்திகள் :

`மோசடி பணம் 60 கோடியை முதலில் செலுத்துங்கள்'- ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல கோர்ட் அனுமதி மறுப்பு

post image

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் அடிக்கடி எதாவது சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். ராஜ் குந்த்ராவும், ஷில்பா ஷெட்டியும் சேர்ந்து டெலிஷாப்பிங் சேனல் ஒன்றை தொடங்கி அதன் மூலம் ரூ.60 கோடி அளவுக்கு மோசடி செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மும்பையை சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோதாரி என்பவரிடம் தொழிலை விரிவுபடுத்தப்போவதாக கூறி ரூ.60 கோடியை ராஜ் குந்த்ரா வாங்கினார். ஆனால் அந்த பணத்தை தனது சொந்த தேவைக்காக பயன்படுத்திக்கொண்டதாக குற்றம் சாட்டிய கோதாரி பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டார்.

ஆனால் அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்காததால் கோதாரி மும்பை போலீஸில் புகார் செய்துள்ளார். இப்புகார் தொடர்பாக ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி ஆகியோரிடம் மும்பை போலீஸார் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர்.

மும்பை உயர் நீதிமன்றம்

அவர்கள் இருவரையும் தேடப்படும் நபர்கள் என்று மும்பை போலீஸார் அறிவித்துள்ளனர். இதனால் இருவரும் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஷில்பா ஷெட்டி தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லவேண்டும் என்று கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்தார்.

இம்மனு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது ஷில்பா ஷெட்டி சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஷில்பா ஷெட்டி யூடியூப் சேனல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற வரும் 25ம் தேதி கொழும்பு செல்லவேண்டியிருக்கிறது என்று தெரிவித்தார். உடனே அழைப்பிதழ் இருக்கிறதா என்று நீதிபதி கேட்டார். அதற்கு, கோர்ட் ஒப்புதல் கொடுத்த பிறகுதான் அழைப்பிதழ் வரும் என்று வழக்கறிஞர் சொன்னார். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, "தம்பதியை முதலில் மோசடி செய்த பணம் ரூ.60 கோடியை செலுத்த சொல்லுங்கள். அதன் பிறகு வெளிநாடு செல்ல அனுமதி கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

அதோடு இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணை வரும் 14ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்தார்.

தமிழகத்தை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - தஷ்வந்த் விடுவித்த உச்ச நீதிமன்றம்

சென்னையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு போரூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் நீதிமன்றத்தில் மரண தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குள்ளான குற்றவாளி ... மேலும் பார்க்க

கேரளா: தெருநாய் தொல்லை குறித்து விழிப்புணர்வு நாடகம்; நடித்துக்கொண்டிருந்தவரை கடித்த தெருநாய்

தெருவில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் நடக்கும் செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. கேரள மாநிலத்தில் தெருநாய்களால் சில குழந்தைகள் இறந்த நிகழ்வுகளும் அரங்கேறின. அதைத் தொடர... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: "இரவானால் மனைவி பாம்பாக மாறி என்னைக் கடிக்கிறார்" - வைரலான கணவனின் புகார்

உத்தரப்பிரதேசத்தில் வாலிபர் ஒருவர் மாவட்ட குறைதீர்ப்பு முகாமில் மாவட்ட நீதிபதியிடம் கொடுத்திருக்கும் புகார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சிதாப்பூர் மாவட்டத்தில் உள்ள லோத்ஷா ... மேலும் பார்க்க

மபி, ராஜஸ்தானில் இருமல் மருந்தால் 16 குழந்தைகள் மரணம்; தமிழக மருந்து கம்பெனிதான் காரணமா?

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதுவரை இரண்டு மாநிலத்திலும் சேர்த்து 16 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து இறந்துள்ளனர். அவர்க... மேலும் பார்க்க

பெங்களூரு: "உறவுக்கு மதிப்பு கொடுத்தேன்; ஆனால்" - திருமண ஆசையில் ரூ.2.3 கோடியை இழந்த 59 வயது ஆசிரியை

ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் போதிய அளவுக்குப் பயனளிக்கவில்லை. திருமண ஆசை, பங்கு வர்த்தகம், டிஜிட்டல் கைது என்று எத... மேலும் பார்க்க

திண்டுக்கல்: "கொடுத்த பணத்தைக் கேட்டால் மிரட்டுகிறார்" - காங்கிரஸ் பிரமுகர் மீது பெண் புகார்

திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி கிராமம், குழந்தைபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது, 'பெரியகோட்ட... மேலும் பார்க்க