செய்திகள் :

கேரளா: தெருநாய் தொல்லை குறித்து விழிப்புணர்வு நாடகம்; நடித்துக்கொண்டிருந்தவரை கடித்த தெருநாய்

post image

தெருவில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் நடக்கும் செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

கேரள மாநிலத்தில் தெருநாய்களால் சில குழந்தைகள் இறந்த நிகழ்வுகளும் அரங்கேறின. அதைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தெரு நாய்களால் மக்களுக்கு ஏற்படும் தொல்லைகளில் இருந்து தீர்வு காணும் விதமாக உடல் நலம் குன்றிய, நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களை மருத்துவர்கள் சான்றிதழ் அளித்தால் கருணைக் கொலை செய்யும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்களும் தெருநாய்களால் ஏற்படும் தொல்லைகள் குறித்தும், அதிலிருந்து தப்பிக்கும் வழிகள் பற்றியும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தெரு நாய்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து ஓரங்க நாடகம் நடத்தி வந்தார் கண்ணூர் மாவட்டம் மய்யில் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்( 56).

நாடக நடிகரான இவர் ஊர்ப்புறங்களில் உள்ள பொது இடத்தில் திண்ணையை மேடையாக்கி அதில் ஒரு ஒலிபெருக்கி வைத்து தனியாளாக தெரு நாய்களால் ஏற்படும் தொல்லைகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தி வந்தார். பேய்க்காலம் என்ற தலைப்பில் அந்த நாடகங்களை நடத்தி வந்தார். மய்யில் அருகே கண்டக்கை பகுதியில் உள்ள கிருஷ்ணபிள்ளை நினைவு படிப்பகத்தில் வைத்து இரவு சமயத்தில் நாடகம் நடித்துக்கொண்டிருந்தார்.

நாடக நடிகர் ராதாகிருஷ்ணன்
நாடக நடிகர் ராதாகிருஷ்ணன்

ஏற்கனவே பதிவுசெய்து வைத்திருந்த உரையாடலை ஸ்பீக்கரில் ஒலிபரப்பி, அதற்கு ஏற்ப நாடகம் நடித்துக்கொண்டிருந்தார். ஒரு தெருநாய் குழந்தையைக் கடிப்பதுபோன்று. அந்த நாயை இவர் கம்பால் துரத்திவிட்டு குழந்தையை மீட்பதுபோன்று காட்சி அமைத்திருந்தார்.

அந்தக் காட்சியை அவர் நடித்துக்கொண்டிருந்தார். கையில் கம்புடன் நாயைத் துரத்துவதுபோன்று நடித்த அவரது பின்னால் துரத்தியபடி வந்த கறுப்பு நிற தெருநாய் ஒன்று ராதாகிருஷ்ணனை கால் முட்டிக்குக் கீழே கடித்தது. நாய் விரட்டுவதைப் பார்த்த பார்வையாளர்கள், அது நாடகத்தின் ஒரு அங்கம் என நினைத்தனர்.

அவரை நாய் கடித்த உடனே எழுந்து சென்று நாயை விரட்டினார். நாய் கடித்த பின்னரும் அதைப் பொருட்படுத்தாமல் தன் நாடகத்தை முழுமையாக நடித்து முடித்தார் ராதாகிருஷ்ணன். பின்னர் கண்ணூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார் ராதாகிருஷ்ணன்.

நாடக நடிகர் ராதாகிருஷ்ணனை தெருநாய் கடித்த காட்சி
நாடக நடிகர் ராதாகிருஷ்ணனை தெருநாய் கடித்த காட்சி

இது குறித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், "நான் ஓரங்க நாடகம் நடிக்கும் நடிகனாவேன். தெரு நாய் குறித்த விழிப்புணர்வு நாடகம் கடந்த ஐந்தாறு மேடைகளில் நடித்து உள்ளேன்.

கண்டக்கை பகுதியில் நாடகம் தொடங்கி ஒரு நிமிடம் ஆகிவிட்டது. ஒரு குழந்தையை நாய் கடிப்பது போன்றும், நான் அந்த நாயை கம்பால் விரட்டுவது போன்றும் நடித்துக் கொண்டிருந்தேன். நான் அந்த ஸ்டேஜில் இருந்து கீழே இறங்கி அப்படியே சுற்றி ஓடி நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென பின்னால் வந்து நாய் கடித்து விட்டது.

இருப்பினும் நான் நாடகத்தை முழுமையாக முடித்துவிட்டுத்தான் மருத்துவமனைக்குச் சென்றேன். நாய் குரைப்பது போன்ற ஆடியோ சத்தமும், நான் கையில் கம்புடன் ஓடி நடித்ததைப் பார்த்த நாய், தன்னைத் தாக்க வந்ததாக நினைத்து என்னைக் கடித்திருக்கலாம். பார்வையாளர்கள் யாரையும் நாய் கடிக்கவில்லை" என்றார்.

உத்தரப்பிரதேசம்: "இரவானால் மனைவி பாம்பாக மாறி என்னைக் கடிக்கிறார்" - வைரலான கணவனின் புகார்

உத்தரப்பிரதேசத்தில் வாலிபர் ஒருவர் மாவட்ட குறைதீர்ப்பு முகாமில் மாவட்ட நீதிபதியிடம் கொடுத்திருக்கும் புகார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சிதாப்பூர் மாவட்டத்தில் உள்ள லோத்ஷா ... மேலும் பார்க்க

மபி, ராஜஸ்தானில் இருமல் மருந்தால் 16 குழந்தைகள் மரணம்; தமிழக மருந்து கம்பெனிதான் காரணமா?

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதுவரை இரண்டு மாநிலத்திலும் சேர்த்து 16 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து இறந்துள்ளனர். அவர்க... மேலும் பார்க்க

பெங்களூரு: "உறவுக்கு மதிப்பு கொடுத்தேன்; ஆனால்" - திருமண ஆசையில் ரூ.2.3 கோடியை இழந்த 59 வயது ஆசிரியை

ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் போதிய அளவுக்குப் பயனளிக்கவில்லை. திருமண ஆசை, பங்கு வர்த்தகம், டிஜிட்டல் கைது என்று எத... மேலும் பார்க்க

திண்டுக்கல்: "கொடுத்த பணத்தைக் கேட்டால் மிரட்டுகிறார்" - காங்கிரஸ் பிரமுகர் மீது பெண் புகார்

திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி கிராமம், குழந்தைபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது, 'பெரியகோட்ட... மேலும் பார்க்க

`நெஞ்சுவலி சார்' - போலீஸிடமிருந்து தப்பிச்சென்ற விசாரணை கைதி

தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டி சீப்பர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் சங்கர் (25). இவர் திருமணம் முடிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். சுபாஷ் சங்கருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரின் அம்... மேலும் பார்க்க

``கட்சி பேதமின்றி சட்டத்தை மட்டுமே நடைமுறைப்படுத்தும் முதல்வர்'' - கரூர் சம்பவம் குறித்து கமல்ஹாசன்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர... மேலும் பார்க்க