செய்திகள் :

Doctor Vikatan: தூக்க மாத்திரைகளுக்கு மாற்றாகுமா மெலட்டோனின் சப்ளிமென்ட்டுகள்?

post image

Doctor Vikatan: நான் கடந்த சில மாதங்களாக தூக்கமின்மையால் பெரிதும் அவதிப்படுகிறேன்.  மருந்துக் கடையில் தூக்க மாத்திரை வாங்கிப் பயன்படுத்துகிறேன். என்னுடைய தோழி, தூக்க மாத்திரைக்கு பதில் மெலட்டோனின் சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளும்படி சொல்கிறாள். அது அடிமைத் தனத்தை ஏற்படுத்தாது என்றும் சொல்கிறாள். அதென்ன மெலட்டோனின் சப்ளிமென்ட், அது உண்மையிலேயே தூக்க மாத்திரைக்கு மாற்றாகுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் 

ஸ்பூர்த்தி அருண்

தூக்கத்தை வரவழைப்பதில் மெலட்டோனின் சப்ளிமென்ட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு. மெலட்டோனின் சப்ளிமென்ட்டுகள், மற்ற தூக்க மாத்திரைகளைப் போல அடிக் ஷனை ஏற்படுத்துவதில்லை.

தூக்கம் வரவில்லை என்றால் முதலில் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சரியானது. நீங்களாக மருந்து, மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடக்கூடாது.

மெலட்டோனின் சப்ளிமென்ட் எடுப்பதானால், தினமும் தூங்கச் செல்வதற்கு 2 மணி நேரம் முன்னதாக  எடுத்துக்கொள்ள வேண்டும். அது சற்று தாமதமாகவே வேலைசெய்யத் தொடங்கும்.

மெலட்டோனின் சப்ளிமென்ட் என்பது பெரும்பாலும் நாடு விட்டு நாடு பயணம் செய்வோருக்கு பெரிய அளவில் உதவி செய்யும்.

நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிற நேரம், சூரிய உதயம் மற்றும் சூரியன் மறைவது போன்றவற்றில் வேறுபாடு காரணமாக ஏற்படுகிற உடல் குழப்பம், அதன்  விளைவாக ஏற்படும் தூக்கமின்மை பிரச்னைக்கு நன்றாக உதவும்.

மெலட்டோனின் என்பது நம் உடலில் உற்பத்தியாகும் ஹார்மோன்தான். இது நமது உறக்க-விழிப்பு சுழற்சியைக் (Sleep-Wake Cycle) கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

உடலில் சுரக்கும் அதே ஹார்மோன் போலவே வேலை செய்து, தூக்கத்தை வரவழைப்பவைதான் மெலட்டோனின் சப்ளிமென்ட்டுகள். இது மிக மென்மையாக வேலை செய்து, தூக்கத்தை வரவழைக்கும். 

தூக்கத்தை வரவழைக்கும் மெலட்டோனின் சப்ளிமென்ட்டுகள்.
தூக்கத்தை வரவழைக்கும் மெலட்டோனின் சப்ளிமென்ட்டுகள்.

தூங்குவதற்குச் சிரமப்படுவோர் அல்லது தூக்கத்தின் தரம் குறைவாக இருப்பவர்கள்,  ஜெட் லேக் (Jet Lag) உள்ளவர்கள்,  இரவில் வெகுநேரம் கழித்து தூங்கி, காலையில் தாமதமாக எழும் பழக்கம் உள்ளவர்கள்,  அறுவை சிகிச்சைக்கு முன் ஏற்படும் பதற்றத்தால் பாதிக்கப்படுவோர் போன்றோருக்கு மெலட்டோனின் சப்ளிமென்ட்டுகள் உதவும்.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி, உங்களுக்குத் தூக்கம் இல்லாததற்கான காரணத்தை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். ஸ்ட்ரெஸ், பதற்றம், மன அழுத்தம் போன்றவை காரணமா என்று பாருங்கள்.

வேறு ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் இருந்தால், மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம். மெலட்டோனின் சப்ளிமென்ட் பயன்படுத்துவதாக இருந்தாலும், மருத்துவ ஆலோசனையோடு எடுத்துக்கொள்வதே பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

மாரத்தான் ஓடும்போதே மரணம்; வராமல் தடுக்க முடியும்! - இதய மருத்துவரின் டேக் கேர் அட்வைஸ்!

உடற்பயிற்சி செய்யும்போது, நடனமாடும்போது சிலர் ஹார்ட் அட்டாக் வந்து இறப்பதை அவ்வப்போது பார்க்கிறோம். அக்டோபர் 5-ம் தேதி, சென்னையைச் சேர்ந்த பரமேஷ் என்பவர் மாரத்தான் போட்டியில் ஓடிக்கொண்டிருக்கையில் சுர... மேலும் பார்க்க

Doctor Vikatan: வீஸிங், ஆஸ்துமா பிரச்னை; இன்ஹேலர், நெபுலைசர் இரண்டில் எது பெஸ்ட்?

Doctor Vikatan:வீஸிங், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் இன்ஹேலர் உபயோகிப்பதற்கும் நெபுலைசர் உபயோகிப்பதற்கும் என்ன வித்தியாசம். இரண்டையுமே உபயோகிக்கலாமா, எது வேகமான நிவாரணம் தரும்?பதில் சொல்கிறார், சென்னையைச... மேலும் பார்க்க

தண்ணீர் கலந்த பாலில் சத்தே இருக்காதா? டயட்டீஷியன் விளக்கம்!

பால் ஏன் அவசியம் அருந்த வேண்டும்; அதில் என்னென்ன சத்துகள் உள்ளன; பாலை காய்ச்சாமல் அப்படியே குடிக்கலாமா; பாலில் தண்ணீர் கலக்கலாமா; யாரெல்லாம் பாலைத் தவிர்க்க வேண்டும் என சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ட... மேலும் பார்க்க

இருமல் மருந்து குடித்து 14 குழந்தைகள் மரணம், தப்பிய தமிழ்நாடு - எச்சரிக்கும் Dr. Rex Sargunam

மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் Coldfrif cough Syrup கொடுக்கப்பட்ட 14 குழந்தைகள் மரணமடைந்திருப்பது இந்திய அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்தினை தமிழ்நா... மேலும் பார்க்க

காலை உணவை முடித்துவிட்டுதான் பல் துலக்கணுமா? - விளக்குகிறார் மருத்துவர்!

ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்குவது நம் பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அதை எத்தனை மணி நேரத்துக்கு ஒருமுறை துலக்குவது? அதிலும் குறிப்பாக, இரவுக்கு உணவு... மேலும் பார்க்க

Doctor Vikatan: குழந்தைகளுக்கு இருமல், ஆயுர்வேத இருமல் மருந்துகள் பாதுகாப்பானவையா?

Doctor Vikatan: இருமல் மருந்து குடித்த பல குழந்தைகள் மரணமடைந்தது குறித்து சமீபத்தில் செய்தியில் பார்த்தோம். குழந்தைகளுக்கு இருமல் வந்தால் அதை எப்படி அணுக வேண்டும். ஆயுர்வேத இருமல் மருந்து கொடுக்கலாமா?... மேலும் பார்க்க