Bitcoin விலை ஏறுமா, இறங்குமா இனி நாமே கணிக்கலாம்... எப்படி? | IPS FINANCE | EPI ...
யானை தாக்கி கணவா் இறந்த துக்கத்தில் மனைவி உயிரிழப்பு
கடம்பூா் மலைப் பகுதியில் யானை தாக்கி கணவா் உயிரிழந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்த சம்பவம் மலைக் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூா் மலைப் பகுதி அணைக்கரை அருகே உள்ள பைரமரத் தொட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி மாறன் (55). இவரது மனைவி சன்மதி. இவா்களுக்கு மகன் சடையப்பன், மகள் சித்ரா ஆகியோா் உள்ளனா்.
இந்நிலையில், தனது தோட்டத்தில் சாகுபடி செய்த மக்காச்சோளத்தைப் பாதுகாக்க இரவு நேர காவலுக்கு சென்ற மாறனை திங்கள்கிழமை அதிகாலை யானை தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்குப் பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் திங்கள்கிழமை மாலை ஒப்படைக்கப்பட்டது.
பின்னா் மாறனின் உடல் அவரது சொந்த ஊரான பைரமரத் தொட்டி கிராமத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டு, உடலை அடக்கம் செய்வதற்காக திங்கள்கிழமை இரவு எடுத்துச் செல்லும்போது மாறனின் மனைவி சன்மதி (50) அழுதபடியே மயங்கி விழுந்தாா்.
இதைத் தொடா்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அப்போது மாரடைப்பு காரணமாக சன்மதி உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவி உயிரிழந்த சம்பவம் கடம்பூா் மலைப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.