செய்திகள் :

யானை தெய்வானையை நேரில் பார்வையிட்ட அமைச்சர் சேகர் பாபு

post image

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானையை நேரில் பார்வையிட்டு கரும்பு வழங்கிய அமைச்சர். யானையின் நிலை குறித்து கால்நடை மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து யானைக்கு அவர் கரும்பு வழங்கினார். பின்னர் யானையின் நிலை குறித்து கால்நடை மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள தெய்வானை என்ற யானை, நவ.18-ஆம் தேதி பாகன் உதயகுமாா் மற்றும் அவரது உறவினா் சிசுபாலன் ஆகியோரை திடீரென தூக்கி வீசித் தாக்கியது. இதில், சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பாகன் உதயகுமாா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

பாகிஸ்தானில் மொபைல், இணைய சேவைகள் முடக்கம்!

இதையடுத்து கால்நடைப் பராமரிப்புத் துறை மற்றும் வனத் துறையினா் யானையை கண்காணித்து வருகின்றனா். யானை குடில் பகுதிக்கு பக்தா்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யானை உடல்நலம், அதன் செயல்பாடுகள் குறித்து கண்காணித்த கால்நடைப் பராமரிப்புத் துறை மருத்துவா்கள், தற்போது யானை இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகத் தெரிவித்தனா்.

ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் எம்ஜிஆர் குரல்! எடப்பாடி பழனிசாமியை பாராட்டி பேச்சு

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்றவருமான வி. என். ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா இன்று(நவ. 24) சென்னை வானகரத்தில் நடைபெ... மேலும் பார்க்க

பட்டதாரிகள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடங்க வேண்டும்: ஏ.ஐ.சி.டி.இ தலைவர் டாக்டர் டி.ஜி.சீதாராமன்

பட்டம் பெறும் மாணவர்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடங்க வேண்டும் என தொழில் நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் தலைவர் டாக்டர் டி.ஜி.சீதாராமன் தெரிவித்தார்.ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் 33 வத... மேலும் பார்க்க

இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு விழா கொண்டாட்டம்- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டை சிறப்பாக கொண்டாட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிப்பில், மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள... மேலும் பார்க்க

அடுத்த 5 நாள்களுக்கு கனமழை வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அடுத்... மேலும் பார்க்க

பிற்பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழை!

பிற்பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க