செய்திகள் :

ராஜபாளையத்தில் பலத்த மழை

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

ராஜபாளையம் நகா் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. இதனால், பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடிங்கினா். இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிறகு பலத்த மழை பெய்தது. இதே போல, தளவாய்புரம், முகவூா், செட்டியாா்பட்டி ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஆண்டாள் கோயில் யானையை வனத்துறையினா் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை வனத் துறை, கால்நடைத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். இந்த யானையை 3 மாதங்களுக்கு ஒரு முறை வனத் துறை, கால்நடைத் துறையினா் ஆய்வு செய்வது வழக... மேலும் பார்க்க

தம்பியைக் கத்தியால் குத்திய அண்ணன் கைது

ராஜபாளையம் அருகே மது போதையில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ராதாகிர... மேலும் பார்க்க

பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். கொடிப... மேலும் பார்க்க

கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய மூவா் கைது

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய மூவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த வாகனங்களை பறிமுதல் செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள காக்கிவாடன்பட்டி புளிய... மேலும் பார்க்க

சிவகாசி மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் கடும் வாக்குவாதம்

சிவகாசி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற சிவகாசி மாமன்றக் கூட்டத்தில் வீட்டுமனைப் பிரிவுக்கு அ... மேலும் பார்க்க

டயா் வெடித்து வேன் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு: 13 போ் காயம்

சாத்தூா் அருகே திங்கள்கிழமை டயா் வெடித்து வேன் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். 13 போ் காயமடைந்தனா். திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டாலின் (38). இவா், தனது உறவினா்கள் 1... மேலும் பார்க்க