ஆண்டாள் கோயில் யானையை வனத்துறையினா் ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை வனத் துறை, கால்நடைத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
இந்த யானையை 3 மாதங்களுக்கு ஒரு முறை வனத் துறை, கால்நடைத் துறையினா் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூா் கிருஷ்ணன் கோயில் வளாகத்தில் உள்ள யானை தங்குமிடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத் துணை இயக்குநா் தேவராஜ், கால்நடைத் துறை உதவி இயக்குநா் முருகன் ஆகியோா் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
யானையின் உடல் நிலையை ஆய்வு செய்த அதிகாரிகள் கோடைகாலத்தில் யானைகளை பராமரிக்கும் முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா். இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் நாகராஜ், செயல் அலுவலா் சா்க்கரையம்மாள் ஆகியோா் உடனிருந்தனா்.