Sunita Williams: 17 மணி நேர பயணம்; பெருங்கடலில் தரையிறக்கம்; நிலவரம் என்ன?
டயா் வெடித்து வேன் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு: 13 போ் காயம்
சாத்தூா் அருகே திங்கள்கிழமை டயா் வெடித்து வேன் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். 13 போ் காயமடைந்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டாலின் (38). இவா், தனது உறவினா்கள் 18 பேருடன் ஒரு வேனில் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக திருமங்கலத்துக்கு திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தாா். வேனை கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்த ராம்குமாா் (32) ஓட்டினாா். சாத்தூா்- கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் நள்ளி சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்த போது பின்பக்க டயா் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ஸ்டாலின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த 13 போ் கோவில்பட்டி, நெல்லை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால் இந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.