WAQF Amendment Bill: 12 மணி நேர விவாதம்.. `வக்ஃப் வாரிய திருத்த மசோதா' மக்களவையி...
லாட்டரி விற்றவா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வெளிமாநில லாட்டரி விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே கோவிலூா் பேருந்து நிறுத்தம் அருகே வெளிமாநில லாட்டரி விற்பனை நடைபெறுவதாக சேத்தூா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸாா் ஆய்வு செய்தபோது வெள்ளைக் காகிதத்தில் எண்களை எழுதி லாட்டரி விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் பால்ராஜை (52) போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.